நாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்!!!

 Thursday, December 20, 2018  05:30 PM   Array comment(s)

எங்கள் ஊருக்கு பக்கத்துக்கு கிராமத்தில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வரும் திருவேங்கடம் என்ற நண்பரிடம் சேகரித்த தவல்களை இங்கே உங்களிடம் பகிந்துகொள்கிறேன்.நாட்டுகோழி பண்ணை அமைக்கும் நண்பர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.இன்றைய நிலையில் ஆர்கானிக்,ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை உணவு முறைகளை நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும் நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் ( பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள் ,அதன் மிக பெரிய வியாபார சந்தை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)

பண்ணை அமைப்பு முறை
-----------------------------------------------

நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை,காற்று,அதிக வெயில் போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே இதற்கு ப்ராய்லர் கோழிகளுக்கு அமைப்பதை போன்ற கொட்டகை அமைப்பது தேவை அற்றது.திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம்,இதற்கு 'டயமன்ட் கிரில்' என்ற மிக சிறிய

ஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடியும்.பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை,மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை போன்ற கொட்டகை போதுமானது.

கோழி தீவனம்
------------------------------


கோழிகளுக்கு உணவாக பச்சை கீரைவகைகள்,கோழி தீவனம் ,காய்கள் மற்றும் கலைஞர் அரிசி போன்றவகைகள் வழங்க படுகிறது.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

நோய் தடுப்பு
-----------------------
தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.

விற்பனை
-------------------
குஞ்சுகள் வளந்த 80 மற்றும் 90 நாட்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று நண்பர் திருவேங்கடம் கூறுகிறார்.

ப்ராய்லர் கோழி வளர்ப்பில் லாபம் பார்ப்பது என்பதும் இன்றைய சுழலில் பெரும் சவாலாகவே உள்ளது. தெரிந்த நண்பர் ஒருவர் ஏழு லட்சம் ருபாய் செலவு செய்து கொட்டகை அமைத்து ப்ராய்லர் கோழி வளர்த்து வந்தார் இப்பொழுது சுகுணா பாம்ஸ் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே குஞ்சுகள் தருகிறார்கள்(சில வியாபார நோக்கத்திற்காக),வருடத்திற்கு ஆறு மாதங்கள் அவரது கொட்டகை காலியாகவே உள்ளது.அவர் இப்போது மொத்த முதலிட்டின் வட்டிக்கு தான் லாபம் வருகிறது என்று புலம்பி திரிகிறார்.ப்ராய்லர் கோழி வளர்ப்பு என்பது சுகுணா போன்ற நிறுவனங்களின் மொத்த கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இது போன்று நாட்டு கோழி வளர்ப்பில் ஈடுபடுவது போன்றவை எவரையும் நம்பாமல் நாமே தொழில் செய்து செழிக்க நல்ல வழி என்று நண்பர் திருவேங்கடம் கூறுகிறார்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


nagarajan palanisamy nagarajan palanisamy commented on 1 year(s) ago
news podum pothu oor idam contact no kuduthal nandraga irukkum
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right