கோவை 'எம் சாண்ட்'க்கு கிராக்கி: உற்பத்தி பலமடங்கு அதிகரிப்பு

 Dinamalar  Tuesday, December 25, 2018  07:04 AM   Array comment(s)

கோவை மாவட்டத்தில், 'எம் சாண்ட்' உற்பத்தியில், ஆண்டுக்கு, 25 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது.தமிழகத்தில் மண், கருங்கல் மற்றும் சுண்ணாம்பு கல் வளம் மிகுந்த மாவட்டமாக, கோவை திகழ்கிறது.

மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கல்லுடைக்கும் கிரஷர்கள் உள்ளன.ஜல்லி, மெட்டல், சைஸ்கல், கல் கால்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் அனுப்பப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள் கூட, சொந்தமாக குவாரிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள, 75 சதவீத குவாரிகளில், ஆற்று மணல் தட்டுப்பாட்டை போக்க, 'எம் சாண்ட்' எனப்படும், செயற்கை மணல் தயாரிக்கப்படுகிறது.தினமும் 100 யூனிட்கருங்கல் பாறைக்கு முன்னதாக, கடினமில்லாத பாறை திட்டுகளை வெட்டி எடுத்து, கிரஷரில் சிறு துகள்களாகஉடைக்கப்படுகின்றன.இதை, தண்ணீர் கொண்டு சலித்து,'எம் சாண்ட்' எடுக்கப்படுகிறது. ஈரமான 'எம் சாண்ட்' உலர்த்தப்பட்டு, 'யூனிட்' கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன. கருப்பு சாம்பல்,வெளிறிய கருப்பு மற்றும் செம்மண் கலர்களில், 'எம் சாண்ட்' கிடைக்கிறது. ஒரு யூனிட் 'எம் சாண்ட்', 4,500 ரூபாய் முதல், 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகும் எம் சாண்ட், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தினமும், நுாற்றுக்கணக்கான லோடுகள் அனுப்பப்படுகின்றன.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, 'எம் சாண்ட்' தேவை அதிகம் உள்ளதால், கோவை மாவட்டத்தில் இருந்து, தினமும், 100 யூனிட் 'எம் சாண்ட்' தயாரிக்கப்படுகிறது. கிராக்கி அதிகம்உள்ளதால், பற்றாக்குறையேநிலவுகிறது.

கோவைக்கு மவுசு'எம் சாண்ட்' உற்பத்தியாளர் ஹரிபிரசாத் கூறியதாவது:

மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு, 'எம் சாண்ட்' தீர்வாக அமைந்துள்ளது. 'எம் சாண்ட்' பல ரகங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட இடங்களில் கிடைக்கும் மூலப்பொருளால், சிமென்ட் போலவே, உறுதியான 'எம் சாண்ட்' கிடைக்கிறது.வடகிழக்கு மாவட்ட கட்டட உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கோவை மாவட்ட 'எம் சாண்ட்' அதிகம் விரும்புகின்றனர். சொந்த இடம், குவாரி, லாரிகள் இருப்பவர்களுக்கு தொழிலில் நீடிக்கலாம்.வரும் காலங்களில், 'எம் சாண்ட்' உற்பத்தியின் போது, வீணாகும் கழிவு மண்ணை கொண்டு, தொழில் நுட்பங்களை அறிந்து, பிரிக்ஸ் தயாரிக்கலாம். 'எம் சாண்ட்' தொழிலில், கோவை மாவட்டத்தில் மட்டும், ஆண்டுக்கு, 25 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது.இவ்வாறு, தெரிவித்தார்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


s.jothiprakash s.jothiprakash commented on 1 year(s) ago
எம் சான்ட்ரா விலை சற்று குறைத்தால் நன்றாய் இருக்கும்
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right