பட்டையை கிளப்பும் பாக்குமட்டை! தொழில் துவங்க இளைஞர்களே தயாரா?

 Sunday, February 24, 2019  05:30 PM   No Comments

பிளாஸ்டிக்' பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை தவிர்க்க, ஒருமுறை பயன்படுத்தி வீசியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்திருக்கிறது தமிழக அரசு. பொதுமக்களும், வணிக நிறுவனத்தினரும் மாற்றுப்பொருட்களை நோக்கி செல்லத் துவங்கிவிட்டனர். பிளாஸ்டிக் தட்டுகள், ஸ்பூன்கள், டீ கிளாஸ்கள், உணவு டப்பாக்களுக்கு பதிலாக பாக்கு மட்டைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.'

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, இளைஞர்களுக்கு புதிய தொழில்களுக்கான வாசலை அகல திறந்துவிட்டுள்ளது.கோவையின் புறநகர் பகுதியான மாதம்பட்டியில், 'எகோ கிரீன் யூனிட்' என்ற பெயரில் பாக்குமட்டையில் இருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் பாபு.இவரே அதற்கான இயந்திரங்களையும் தயாரிக்கிறார். தான் கடந்து வந்த பாதை குறித்தும், இத்தொழிலில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் பாபு கூறியதாவது:எனது சொந்த ஊர் பொள்ளாச்சி அருகேயுள்ள சேத்துமடை. எங்களுக்கு ஏழு ஏக்கரில் பாக்கு தோப்பு இருக்கிறது. வீணாக விழும் பாக்கு மட்டையில் இருந்து தட்டுகள் தயாரிக்கும் இயந்திரத்தை, 1999ம் ஆண்டு வடிவமைத்தேன். கோவை தொழிற் கண்காட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பாக்குமட்டை தட்டுகள் தயாரிப்பது குறித்து நிறைய பேருக்கு பயிற்சி அளித்ததோடு, அவர்களுக்கு தேவையான இயந்திரங்களையும் நானே வடிவமைத்து கொடுத்தேன். சேத்துமடையில் இருந்து கோவை, மாதம்பட்டி பகுதிக்கு நிறுவனத்தை இடம் மாற்றினேன்.அரசு அமைப்புகளின் மூலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களைசேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்கள், குறுந்தொழில்முனைவோர் ஆகியோருக்கு பயிற்சி அளித்தேன். பயிற்சி பெற்று பொருட்களை சந்தைப்படுத்த முடியாதவர்களின் பொருட்களை நானே வாங்கி விற்பனையும் செய்தேன். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு பாக்குமட்டையில் தயாராக பொருட்கள் ஏற்றுமதியாகி வருகின்றன.ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இயந்திரங்கள் ஏற்றுமதியாகி வருகின்றன. தற்போது ஒருமுறை பயன்படுத்தி வீசியெறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் இப்பொருட்களுக்கான விற்பனை வாய்ப்பு அதிகமாகி இருக்கிறது.அதனால், இத்தொழிலில் ஈடுபடுவோருக்கும் வளமான எதிர்காலம் இருக்கிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பொருட்கள் என்பதால்,இவற்றுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கும். தொழில் துவங்க விரும்புவோர், 94873 76767 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, பாபு கூறினார்.இவர், 2011ம் ஆண்டுக்கான புதிய கண்டுபிடிப்புக்கான மத்திய அரசின் விருதை பெற்றுள்ளார்.தேவையான மூலப்பொருட்கள்பாக்குமட்டை தட்டுகள், டீ கப்புகள், ஸ்பூன் தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருள் பாக்கு மட்டை. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களிலும், பாக்குமட்டைகள் தாராளமாக கிடைக்கிறது. தமிழகத்தில் கோவை, சேலம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பாக்குமட்டைகள் அதிகளவில் கிடைக்கிறது.கோவையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும், கோவை புறநகர் பகுதியான பேரூர், செம்மேடு, ஆலாந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள பாக்கு தோட்டங்களில் இருந்தும் மட்டைகளை தாராளமாக பெறலாம். ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் பாக்குமட்டை சீசன் காலம்.

மற்ற மாதங்களில் சற்று குறைவாகவே கிடைக்கும். அவ்வப்போது தேவைக்கேற்ப பாக்கு மட்டைகளை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று இருக்கக்கூடாது. எப்போதும் ஒரு லோடு பாக்குமட்டைகளை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சிரமம் இல்லாமல் இருக்கும்.எவ்வளவு பொருட்கள் தயாரிக்கலாம்?ஐந்து அச்சுக்கள் கொண்ட பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரம், 2.70 லட்ச ரூபாய். இதன் மூலம் 12 , 10, 8, 6 இன்ச் என நான்கு அளவுகளில் தட்டுகள், நான்கு இன்ச் டீ கப்புகள் என்று ஐந்து அளவுகளில் பொருட்கள் தயாரிக்கலாம். ஒரு மணி நேரத்தில் 10 , 12 இன்ச் பிளேட்டுகள் 70; எட்டு இன்ச் பிளேட் 100; ஆறு இன்ச் பிளேட் 120; நான்கு இன்ச் டீ கப் 150... ஆகியவற் றை தயாரிக்க முடியும்.இரண்டு தொழிலாளர்கள் தேவைப்படுவர். நடைமுறை மூலதனமாக ஒரு லட்ச ரூபாய் தேவைப்படும்.மாதத்துக்கு நிகர லாபமாகஎப்படியும் 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.எவ்வளவு பொருட்கள் தயாரிக்கலாம்?ஐந்து அச்சுக்கள் கொண்ட பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரம், 2.70 லட்ச ரூபாய். இதன் மூலம் 12 , 10, 8, 6 இன்ச் என நான்கு அளவுகளில் தட்டுகள், நான்கு இன்ச் டீ கப்புகள் என்று ஐந்து அளவுகளில் பொருட்கள் தயாரிக்கலாம். ஒரு மணி நேரத்தில் 10 , 12 இன்ச் பிளேட்டுகள் 70; எட்டு இன்ச் பிளேட் 100; ஆறு இன்ச் பிளேட் 120; நான்கு இன்ச் டீ கப் 150... ஆகியவற்றை தயாரிக்க முடியும்.இரண்டு தொழிலாளர்கள் தேவைப்படுவர்.

நடைமுறை மூலதனமாக ஒரு லட்ச ரூபாய் தேவைப்படும். மாதத்துக்கு நிகர லாபமாக எப்படியும் 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.விற்பனை வாய்ப்புபிளாஸ்டிக் தடை அறிவிப்பின் காரணமாக, மாற்றுப்பொருட்களை தேடி டீக்கடைகாரர்கள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். அதனால், அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளிலேயே உங்கள் பொருட்களை சந்தைப்படுத்தலாம்.

வாட்ஸ் - அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தினாலே, ஆர்டர்கள் தேடி வரும்.யாரெல்லாம் தொழில் தொடங்கலாம்தொழில் பற்றிய தெளிவு, நல்ல பயிற்சி, சந்தைப்படுத்துதல் குறித்த அறிவு உள்ளவர்கள் தாராளமாக இத்தொழிலில்ஈடுபடலாம். இயந்திரத்தை வைத்து, பொருட்களை தயார் செய்ய சிறிய அறையே போதுமானது. மூலப்பொருட்களை வைக்கவும், தயாரிப்பு பொருட்களை வைத்திருக்கவும் இடம் தேவை.

விற்பனை வாய்ப்புபிளாஸ்டிக் தடை அறிவிப்பின் காரணமாக, மாற்றுப்பொருட்களை தேடி டீக்கடைகாரர்கள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். அதனால், அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளிலேயே உங்கள் பொருட்களை சந்தைப்படுத்தலாம். வாட்ஸ் - ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தினாலே, ஆர்டர்கள் தேடி வரும்.

மானியத்துடன் கடன் பெறலாம்!

பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்கள் தயாரிப்போருக்கான கடன் திட்டங்கள் குறித்து கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வெங்கடரமணிடம் பேசியபோது, ''மாற்றுப்பொருள் தயாரிப்போருக்கென சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. தெளிவான திட்ட அறிக்கை, தொழில் குறித்த தெளிவு மற்றும் ஆர்வத்துடன் இளைஞர்கள் வந்தால், அவர்களுக்குநடைமுறையில் இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் கடன் திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும். ''கடனுக்காக ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கும் வசதிகள் தற்போது வந்துவிட்டன. மாவட்ட தொழில் மையத்தை அணுகினால், அவர்கள் வழிகாட்டுவார்கள்,'' என்றார்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right