மசினகுடி - ஒரு டூர் ஸ்பெஷல்

 Wednesday, September 11, 2019  06:30 PM   No Comments

தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமான ஊட்டிக்கு அருகே இருக்கிறது முதுமலை. நீலகிரி மலையின் அடிவாரத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் முக்கோண வடிவில் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள முதுமலை, அவசியம் பார்க்க வேண்டிய இடம். தென்னிந்தியாவின் முக்கியமான வனப் பகுதியும்கூட. யானை, புலி, கரடி போன்ற அபூர்வ விலங்குகள் அதிகம் வசிக்கும் இந்தக் காட்டுக்குள் ஒருமுறை வலம் வந்தால், கானகத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்தவர்கள் ஆவோம்.

முதுமலை என்பது தமிழக வனப் பகுதியைக் குறிக்கிறது. இதில் சில கிராமங்கள் இருந்தாலும் அவை அளவில் மிகச் சின்னவை. இதில், பெரும்பாலும் பழங்குடியினர்கள் வசிக்கிறார்கள். அதில், முக்கியமான ஓர் ஊர்தான் மசினகுடி. முதுமலை வன விலங்குச் சரணாலயத்தின் ரிசப்ஷன் அமைந்திருக்கும் இடம் தெப்பக்காடு, மாயாறு மின் திட்டப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் இந்தப் பகுதியில் உள்ள சிற்றூர்களுக்கு மசினகுடிதான் முக்கியமான ஊர்.

ஊட்டியைப்போல குளிரோ அல்லது சென்னையைப் போல வெயிலோ மசினகுடியில் இருக்காது. வனத்துறையின் சஃபாரியில் காட்டுக்குள் சென்று வந்தால், த்ரில் குறையாத அனுபவம் நிச்சயம். யானைகள், மான்கள், மலை அணில், சிறுத்தை, காட்டு மாடுகள், அதிர்ஷ்டம் இருந்தால் புலியைக்கூட பார்க்கலாம். காலை, மாலை வேளைகளில் ஊட்டி - மைசூரு நெடுஞ்சாலையைக் கடந்து, காட்டு யானைகள் நீர் அருந்த குடும்பம் குடும்பமாக வருவதைக் காணலாம். தெப்பக்காடு யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கு காலை, மாலை உணவு அளிப்பதைப் பார்க்கலாம். காட்டுக்குள் ஓடும் ஒரு சிறு ஓடைதான் தமிழக - கர்நாடக எல்லையைப் பிரிக்கும் கோடு. அந்தப் பக்கம் பந்திப்பூர் வன விலங்குச் சரணாலயம். அங்கும் சஃபாரி, ட்ரெக்கிங் போன்றவை உண்டு. அப்படியே பந்திப்பூரைக் கடந்து குண்டக்கல் என்ற ஊரில் இடதுபுறம் செல்லும் சாலையைப் பிடித்து சில கி.மீ தூரம் சென்றால், கேரளா மாநிலத்தில் நுழைந்து வயநாடு வன விலங்குகள் சரணாலயம். அப்படியே சுல்தான்பத்தேரி என்ற ஊருக்குள் புகுந்து, இடதுபுறம் வனம் புகுந்தால், கூடலூர் வழியாக மீண்டும் மசினகுடிக்கு வந்தடையலாம்.

ஊட்டியில் இருந்து மைசூர் நெடுஞ்சாலையில் கூடலூர் வழியாகவும் செல்லலாம். அல்லது கல்லட்டி வழியாகவும் செல்லலாம். ஈரோடு - சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ்நகர் வழியாக குண்டக்கல், பந்திப்பூர் வழியாக மசினகுடி வரலாம். மலை ஏறி இறங்க யோசிப்பவர்களுக்கு ஒரே வழி, பெங்களூரு - மைசூரு வழியாகச் சுற்றிக்கொண்டு வர வேண்டும்.

ஊட்டி - மசினகுடி (கல்லட்டி வழி) - 29 கி.மீ. கூடலூர் வழி - 68 கி.மீ

கோவை - மசினகுடி - 116 கி.மீ

சத்தியமங்கலம் - மசினகுடி - 150 கி.மீபெங்களூரு - மசினகுடி - 240 கி.மீ

தெப்பக்காடு ரிசப்ஷன் அருகே வனத்துறை விடுதிகள் இருக்கின்றன. முன்பதிவு செய்வது அவசியம். மசினகுடி ஊருக்குள்ளும் அதைச் சுற்றிலும் ஏராளமான தங்கும் விடுதிகளும், ரிசார்ட்டுகளும் இருக்கின்றன. சீஸனில் இருவர் தங்கும் அறைக்கு குறைந்தது 700 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரை கிடைக்கும்.

(மசினகுடியில் இருந்து)

தெப்பக்காடு யானைகள் காப்பகம் - 8 கி.மீ

பந்திப்பூர் சரணாலயம் - 45 கி.மீ

கபினி அணை - 140 கி.மீ

மைசூரு - 120 கி.மீSimilar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right