விடுமுறையை கழிக்க அருமையான ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் - மேகமலை

 Friday, October 25, 2019  06:30 PM   No Comments

இளம் தலைமுறையினரும், சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் விரும்பிச் செல்லக்கூடிய இடம் தான் “தென்னகத்து தொட்டபெட்டா” என்று அழைக்கப்படும் 'மேகமலை ஹைவேவிஸ்' மலைப்பகுதி. பசுமை நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலையில் மனிதர்களால் இன்னும் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றாக மிக அழகாக காட்சியளிக்கிறது மேகமலை வனப்பகுதி.

எட்டுதிசையும் மலைச்சிகரங்களால் சூழப்பட்ட நடுவே உள்ள பள்ளத்தாக்கு மேகமலை. தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலங்களில் சிறந்த நிலஅமைப்பு கொண்டதாக இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலை முழுவதும் 'மேகங்களால் சூழப்பட்டு ஆட்சி செய்வதால் மேகமலை' என்று பெயர் விளங்குகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சைப்பசேல் என எங்கு பார்த்தாலும் பசுமை போர்வை உடுத்தியது போல் பரந்து விரிந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு தான் இந்த மேகமலை. பசுமையான நிலப்பரப்புடன் வானுயுர்ந்த மரங்களுடன் மிக அடர்த்தியாக காணப்படுகிறது இந்த வனப்பகுதி.

மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டங்களை காண கண் கோடி வேண்டும். உயர்ந்த மலை, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என பல இயற்கை அழகுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இங்குள்ள தேயிலைகளை பக்குவப்படுத்துவம் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அது தனியார் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

ஹைவேவிஸ் பயணம்

ஆரம்ப காலங்களில் ஹைவேவிஸ் செல்லும் மலைப்பாதை இங்குள்ள தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனத்தால் இந்தப் பாதையை சரியாக பராமரிக்க முடியாததால் அந்தத் தேயிலை நிறுவனம் தமிழக அரசின் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் சாலை பராமரிப்பை ஒப்படைத்தது.

இதனால் அங்கு தற்போது புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சின்னமனூரில் இருந்து சில சிற்றூர்களை கடந்து சென்றால் முதலில் வருவது தென்பழனி வனப்பகுதி சோதணைச்சாவடி. இங்குள்ள அதிகாரிகளிடம் சுற்றுலா செல்பவர்கள் தங்களைப்பற்றிய விவரங்களை பதிவுசெய்த பின்னரே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி அளிப்பார்கள்.
இதனருகே உள்ள 'வழிவிடு முருகன் கோவிலில்' மலைமேல் செல்கின்ற வாகனங்களும் அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என இங்கு வணங்கிச் செல்வது வழக்கம். மலைப்பாதையின் சாலை 18 அடியாகக் குறுகிய பாதையாக உள்ளதால் பேருந்துகள் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் செல்கின்றன. மலை மீது ஏற ஏற பல கொண்டை ஊசிவளைவுகள் இருக்கின்றன. சாலை அகலம் குறைவு என்பதால் ஒருநேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்லமுடியும்.

உயரே செல்லச் செல்ல பசுமையான மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பசுமையான காட்டில் ஓங்கி உயர்ந்த மரங்கள் மற்றும் பெரும் பள்ளத்தாக்குகள் அதிசியக்கவும் ஆச்சிரியப்படவும் வைக்கின்றன. அதேசமயத்தில் நம்மை அச்சப்படவும் வைப்பதுதான் வனத்தின் அழகு!

சிறகடித்துச் செல்லும் பறவைகளின் கூட்டத்தையும், சிங்கவால் குரங்குகளையும் அதிகம் பார்க்கலாம். காட்டுக் கோழிகள், சேவல்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என பசுமையாக காட்சி அளிக்கின்றன.

தொடர்ந்து பயணித்தால் முதலில் நம்மை வரவேற்பது மேகமலை என்ற ஊர். சவாலான மலைப்பாதை என்றாலும் பசுமையான இயற்கை ரம்மியமாக இருக்கிறது. தொடர்ந்து பயணித்தால் ஹைவேவிவஸ். இங்குள்ள பள்ளத்தாக்குகளில் இருக்கும் அணை நீர் குளிர்ந்த காற்றை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறது.

ஹைவேவிஸ் பகுதியை தொடர்ந்து மஹாராஜாமெட்டு என்கிற இடம் வருகிறது. இங்கு செல்ல மிகவும் கரடுமுரடான சாலைகளை கடந்துதான் போக வேண்டும். ஆனாலும் இருபுறமும் கண்களுக்கு குளுமையாக தேயிலை தோட்டங்கள், வெண்ணியாறு, இரவங்கலாறு, வட்டப்பாறை, கண்ணாடி மாளிகை எனப்பல இடங்கள் இருக்கின்றன.

அணைகளும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அணைகளிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது. இரண்டு மலைகளுக்கிடையே கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. இந்தஅணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம்; அத்தனை தெளிவு.

சின்னமனூரில் இருந்து சுமார் 2 மணிநேரப் பயணத்துக்குப் பின்னர் ஹைவேவிவஸ் பகுதியை அடையலாம். ஹைவேவிஸ் தேர்வு நிலைப் பேருராட்சியாக இருந்து வருகின்றது. இப்பேருராட்சிக்கு மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, அப்பர்மணலாறு, மஹாராஜாமெட்டு, இறவங்கலாறு, வெண்ணியாறு உள்பட 7 மலைக்கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் தேயிலை தோட்டத் தொழிலாளிகளே.

இங்கு பகல்நேர வெப்பநிலை ஏறக்குறைய 12 டிகிரி செல்சியஸ் அதனால் தான் எப்போதும் குளிர்காலம் போன்றிருக்கும்.
குளிர்கால சீசன் என்றால் பகலில் கூட ஸ்வெட்டர் தேவைப்படும். செல்லும் வழிகளில் ஆங்காங்கே உள்ள அருவிகளில் எல்லாப் பருவ நிலைகளிலும் தண்ணீர் வருவது இப்பகுதியின் தனிச்சிறப்பு.


தேனி மாவட்டம் சின்னமனூர் நகரிலிருந்து மலைப்பாதை வழியாகச் சென்றால் மேகமலையை அடையலாம். மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலபரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டம், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது. மேகமலை நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த அமைப்பு கொண்டது.

தனியார் நிறுவன உடமை :

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்குச் சொந்தமான தனி தேயிலைத் தோட்டமாகவும், இத்தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை பக்குவப்படுத்தும் தொழிற்சாலையும் இங்கு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்பகுதி தனியார் தேயிலை நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இம்மலைப்பகுதியின் சாலை உட்பட அனைத்துப் பகுதிகளும் இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது இந்நிறுவனத்தால் இப்பாதையைச் சரிவர பராமரிக்க முடியாததால் சாலையின் பெரும்பகுதிகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியின் சாலையைப் பராமரிக்க தேயிலைத் தோட்ட நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்து விட்டது.

நீர்மின்சக்தி திட்டம் :

இம்மலைப்பகுதியில் ஹைவேவிஸ் எனும் பேரூராட்சி அமைப்பில் ஊர் ஒன்று உள்ளது. இந்த ஊர் முதலில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நகரியம் எனும் அமைப்பிலிருந்தது. இம்மலைப்பகுதியில் வெண்ணியார், இரவங்கலார், மகராசாமெட்டு போன்ற பிற குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. இம்மலைப்பகுதியில் உள்ள சுருளியாறு பகுதியில் அமைக்கப்பட்ட அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரிலிருந்து நீர் மின்சக்தி எடுக்கும் 'சுருளியாறு நீர்மின்சக்தி திட்டம்' அமைக்கப்பட்டுள்ளது.



மேகமலை சிறப்புகள்!

மேகமலை நான்கைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள மலைவாசஸ்தலங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி என்பதால் மேகமலை என்று பெயர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடுதான், இந்த மேகமலை.

பசுமையான நிலபரப்புடன் பெரிய பெரிய மரங்களுடன் இந்தப் பகுதி காணப்படுகிறது. மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டங்களைக் காண கண் கோடி வேண்டும். உயர்ந்த மலை, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என என பல இயற்கை அழகுகள் கொட்டிக் கிடக்கும் ஊர் மேகமலை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை பக்குவப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்தது.

எங்கே இருக்கிறது?

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இந்த நகரம் உள்ளது. சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு மலைப் பாதைவழியாகதான் செல்ல முடியும். மலைப் பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி, அடுத்த 20 கி.மீ. தேயிலை தோட்டங்கள்... மேகமலை செல்ல பஸ் வசதி இருக்கிறது. காரில் செல்பவர்களுக்கு கொஞ்சம் கடினம் தான். ஜீப், எஸ்யூவி போன்ற வாகனங்களை பயன்படுத்தினால் அதிக கஷ்டம் இல்லாமல் மலைப் பாதையில் பயணிக்கலாம்.

எப்படிப் போகவேண்டும்?

சின்னமனூரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது மேகமலை. பேருந்தில் சின்னமனூரிலிருந்து நேராகச் செல்லலாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேருந்து வசதி உண்டு. கட்டணம் சுமார் 20 ரூபாய். காரில் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம்.

தங்கும் வசதிகள் மற்றும் உணவுகள்

ஹைவேவிஸ் தேர்வு நிலைப் பேருராட்சியின் சார்பாக இங்குள்ள பயணியர் தங்கும் விடுதிகளில் 3 நபர்கள் தங்கக் கூடிய அறை ஒன்றின் நாள் வாடகை ரூ. 1,120 (12% ஜி.எஸ்.டி வரிகள் உள்பட) , 6 நபர்கள் தங்கக்கூடிய அறை ஒன்றின் நாள் வாடகை ரூ.1,680 (12% ஜி.எஸ்.டி வரிகள் உள்பட) ஆகவும் உள்ளது. சாப்பிடுவதற்கு சைவம் மற்றும் அசைவ ஹோட்டல்கள் உள்ளன. இங்குள்ள அணைகளில் நேரடியாகவே பிடிக்கப்படும் கோல்டு ஃபிஷ் என்கிற மீன் அதிகம் சிறப்பு வாய்ந்தது.

எப்படி செல்ல வேண்டும்?

சின்னமனுரில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள இந்தப்பகுதிக்குச் செல்ல சாலைவழிப் போக்குவரத்து மட்டுமே உள்ளது சின்னமனுரிலிருந்து குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேருந்து வசதி உண்டு. ஜீப் மற்றும் எக்ஸ்.யு.வி ரகம் போன்ற கார்களை பயன்படுத்தினால் சிறப்பு. இயற்கையை விரும்புகின்ற ஒவ்வொருவரும் கட்டாயம் சென்று ரசிக்கக்கூடிய பயணம் இந்த ஹைவேவிஸ் பயணம்.
இதை ஓர் ஆரோக்கிய பயணம் என்றும் அழைக்கலாம்!

பயணம் எப்படி?

ஒரு காலத்தில் மேகமலைக்கு செல்லும் மலை பாதை தனியார் தேயிலை நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனத்தால் இந்தப் பாதையைச் சரியாக பராமரிக்க முடியவில்லை. இதனால், அந்த தேயிலைத் தோட்ட நிறுவனம், தமிழக அரசின் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் சாலை பராமரிப்பை ஒப்படைத்திருக்கிறது. சின்னமனூரில் இருந்து சில சிற்றூர்களை கடந்து சென்றால், தென்பழனி வனப் பகுதி செக் போஸ்ட் வரும். இந்த செக்போஸ்டில் உள்ள அதிகாரிகளிடம், சுற்றுலா செல்பவர்கள் தங்களை பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தால்தான் வனப் பகுதிக்குள் நுழைய அனுமதி கொடுப்பார்கள்.

சிறிது தூரத்தில், அடிவாரத்தில் வழிவிடு முருகன் என்ற கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் அருகே மலை மேல் போகிற வாகனங்களுக்கும், அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என பெண்கள் ஆரத்தி காட்டுவார்கள். இவர்களில் வயதான மூதாட்டிகளும் உண்டு. ஆரத்தி காட்டுபவர்களுக்கு தட்டில் காணிக்கை செலுத்தி விட்டு மலை மேல் ஏற ஆரம்பிக்கலாம்.

போகப் போக சாலை 20 அடியாகக் குறுகி போகிறது. அதனால், பேருந்துகள் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் செல்கின்றன. பறவைக் கூட்டத்தை அதிகம் பார்க்கலாம். மலை மீது ஏற ஏற பல ஹேர்பின் வளைவுகள் இருக்கின்றன. சாலை அகலம் குறைவு. ஒரு நேரத்தில், ஒரு வண்டி மட்டுமே செல்ல முடியும். உயரே செல்ல செல்ல பசுமையான மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பசுமையான காட்டில் ஓங்கி உயர்ந்த மரங்கள் மற்றும் பெரும் பள்ளத்தாக்குகள் அதிசயிக்கவும் ஆச்சர்யப்படவும் அச்சப்படவும் வைப்பதுதான் வனத்தின் அழகு.

காட்டுக் கோழிகள், சேவல்களை அதிகம் பார்க்கலாம். சிங்க வால் குரங்குகளுக்கும் பஞ்சமில்லை. தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என பசுமையாக காட்சி அளிக்கின்றன. தொடர்ந்து பயணித்தால், ஹைவேவிஸ் என்ற ஊர் வருகிறது. கரடு முரடான பாதை என்றாலும் பசுமையான இயற்கை ரம்மியமாக இருக்கிறது. மேலும், பள்ளத்தாக்குகளில் இருக்கும் அணை நீர், குளிர்ந்த காற்றை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறது. ஹைவேவிஸ் -ல் சாப்பிட ஹோட்டல் இருக்கிறது. ஹோட்டலில் சைவம் மற்றும் அசைவம் சாப்பாடு கிடைக்கிறது. அணையில் பிடித்த கோல்டு ஃபிஷ் என்கிற மீன் பொரியல் கிடைக்கும்.

அடுத்து மகாராஜா மெட்டு என்கிற இடம் வருகிறது. இதுவும் கரடுமுரடான சாலையை கொண்டதுதான். இருபுறமும் கண்ணுக்கு குளுமையாக தேயிலைத் தோட்டங்கள், வெண்ணியார், இரவங்கலாறு, வட்டப்பாறை என பல இடங்கள் இருக்கின்றன. அணைகளும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அணைகளிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது. இரண்டு மலைகளுக்கு இடையே பெரிதாக கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை தெளிவு.

சுமார் 3 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் மேகமலையை அடையலாம். வீடுகளின் எண்ணிக்கை மிக குறைவு. பகல் நேர வெப்பநிலை ஏறக்குறைய 12 டிகிரி செல்சியஸ். அதனால்தான் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகலில் கூட 'ஸ்வெட்டர்' தேவைப்படும். வழியில் ஆங்காங்கே அருவிகள் உள்ளன. எல்லாப் பருவ நிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.

உட்பிரையர் என்கிற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களே மேகமலை முழுக்க பரவியிருக்கின்றன. இந்த நிறுவனத்தில் டீத்தூள் உருவாகும் முறையை தெரிந்து கொள்ளலாம். அதற்கு நபர் ஒருவருக்கு 100 ரூபாய் வசூலிக்கிறார்கள்.

இயற்கையின் ரசிகர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம் இது. இதை ஓர் ஆரோக்கிய பயணம் (ஹெல்த் டிராவல்) என்று கூட சொல்லலாம்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right