டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைக்கானSSC CGL தேர்வு! விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு!!

 Tamil.samayam  Friday, November 8, 2019  12:22 PM   No Comments

SSC CGL Exam 2019: Staff Selection Commission எனப்படும் எஸ்.எஸ்.சி தேர்வாணையம், டிகிரி முடித்தவர்களுக்கான SSC CGL தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Staff Selection Commission (SSC) எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்தி வருகிறது. தற்போது டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு லெவல் தேர்வு நடத்துகிறது.

இதற்கான அறிவிக்கை கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், இளநிலை புள்ளியியல் அலுவலர் என மொத்தம் 34 வகையான பணிகள் உள்ளது. பதவிக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படுகிறது.SSC CGL 2019 தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. நவம்பர் 22 ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும். இந்த நிலையில், தற்போது SSC இணையதளத்தில் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வழங்கியுள்ளது.

பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் SSC CGL Exam 2019 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரையில் எடுத்துக் கொள்வர். இவ்வாறு ஒட்டுமொத்தமாக இறுதி நேரத்தில் விண்ணப்பிக்கும் போது, SSC இணையதளம் ஸ்தம்பித்து விடும். இதனால், கடைசி நேரத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாமல் போய்விடும்.

எனவே, SSC CGL தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கடைசி நாள் வரையில் காத்திருக்காமல், உடனே விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த SSC தேர்வுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதால், அரசு வேலைக்கு தயாராகி வரும் பட்டதாரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right