மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு! 1,508 காலியிடங்கள்!!

 Saturday, November 23, 2019  12:30 PM   No Comments

Tamil Nadu Medical Services Recruitment Board (TN MRB) எனப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நவம்பர் 19 ஆம் தேதியிட்ட, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை mrb.tn.gov.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆய்வக உதவியாளர் கிரேடு III பணிக்கு 1,508 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தற்காலிக பணியிடம் ஆகும். இருப்பினும், அடுத்தடுத்து வரக்கூடிய அரசு வேலைகளுக்கு, இந்த பணி அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், தகுதி உள்ளவர்கள் தாரளமாக விண்ணப்பிக்கலாம்.

TN MRB Lab Technician கிரேடு III பணிக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 1,508 காலியிடங்கள் உள்ளது. இவற்றில் பொது பிரிவினருக்கு 465, BC-398, BC(M)-53, MBC/DNC-301, SC-226, SC(A)-45, ST-20 என்ற வகையில் காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.1.7.2019 அன்றைய தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். OC பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், மற்ற அனைத்து பிரிவினரும் 57 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். OC பிரிவில் மாற்றுத்திறனாளிகள் 40 வயது வரையிலும், முன்னாள் ராணுவத்தினர் 48 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகள் 57 வயது வரையிலும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

கல்வித்தகுதி: TN MRB Lab Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஒரு வருடம் மெடிக்கல் லேப் டெக்னாலாஜி துறையில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியத்துடனும், பார்வை திறன் மிக்கவராகவும் இருக்க வேண்டும்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right