கொங்குநாட்டின் பென்னிகுயிக் மாமனிதர் பு ஆ சாமிநாதன் அவர்கள்

 Monday, November 25, 2019  06:30 PM   No Comments

சமூகத்தின் வளர்ச்சியை அதில் அங்கமாக இருக்கின்ற மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சியைக் கொண்டு அளவிடலாம். இதில் ஒவ்வொரு காரணியும் மற்றொன்றை சார்ந்திருக்கிறது. எங்கெல்லாம் கல்வியில்லையோ அங்கு பொருளாதாரமும் பண்பாடும் குலைந்து விடும். இங்கு கல்வி என்பது நல் ஒழுக்கத்தை கற்றுத்தரும் கல்வியை குறிக்கிறது. அதேபோல ஒரு சமூகம் பொருளாதரமில்லால் வருமையிலிருக்கும்போது கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி குறைந்து விடுகிறது. அது நாளடைவில் எதிர்மறை விழைவுகளைக்கொடுக்கிறது. எங்கெல்லாம் வறுமை தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் ஒழுக்கச்சீர்கேடு தலை தூக்குகிறது. பெரும்பாலான கொலை கொள்ளைகளுக்கு முக்கிய காரணம் சமூக ஏற்றத்தாழ்வும், வருமையும் தான். இல்லாமல் வாழமுடியாதவன் இருப்பவரிடம் பறித்து வாழ முயற்சிக்கிறான். அது போலவே ஒவ்வொரு ஒழுங்கீனத்தின் பிறப்பும் அந்த சமூகத்தின் முக்கிய காரணியான கல்வி, பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது.

நாம் இப்போது நன்றியோடு நினைவுகூறும் பென்னிகுக்கிற்க்கு நம் சமூகத்தின்மீது கொண்ட அக்கறையின்பால் உருவானதே முல்லைப்பெரியாறு அணை. பஞ்சத்தால் இடம்பெயர்ந்துகொண்டும், உயிரை இழந்து கொண்டும் இருந்த மதுரை, தேனி மக்களின் வாழ்க்கை செழிக்க பென்னிகுக் கண்ட கனவே முல்லைப்பெரியாறு.

ஏறத்தாள இதுபோன்ற ஒரு நிலையில் தான் ஈரோடு, சத்தியமங்கலம் மற்றும் பவானி பாசனப்பகுதிகள் இருந்தது. ஆங்கிலேயர்களின் திட்டப்படி 1948-1955 காலவாக்கில் கட்டிமுடிக்கப்பட்ட தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணைதான் பவானிசாகர் அணை. மேற்க்கு தொடச்சிமைலையில் பெய்யும் மழையும் ஊற்றுகளும் சேர்ந்து ஆறாக மாறி மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக சத்தியமங்கலம் வழியாக கோபி அத்தாணி, ஈரோடு என்று கால்பட்ட இடமெல்லாம் பசுமையாக்கிச்செல்லும் பவானி நதி தேக்கி வைகப்படும் இடம் ஆங்கிலேயர்களால் பவானிசாகர்(சாகர் – ஹிந்தியில் கடல்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேற்க்குதொடற்ச்சி மலையின் இன்னொரு பகுதியிலிருந்து பெருக்கெடுத்துவரும் மாயாறும் இந்த அணையில் கலந்து தேங்குகிறது. ஆற்றின் தண்ணீர் ஆளவு நிமிடத்தில் உயர்ந்தும் குறைந்தும் மாயம் காட்டுவதால் இந்த ஆறு மாயாறு என்றபொருளில் அழைக்கப்படுதாகக்கூறப்படுகிறது.

இந்த கட்டுரையை படிக்கும் உங்களுகொரு கேள்வி எழலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947, அதற்க்குப்பின் கட்டப்பட்ட அணை, எப்படி ஆங்கிலேயர்கலால் திட்டமிடப்பட்டது என்று. வரலாறு சற்று புதிரானது. ஒரு அணையைகட்ட ஏழு ஆண்டுகள்(1948-1955) வெறும் கட்டுமானத்திற்க்கே தெவைப்படும் கால அளவு. அதற்க்கு முன் நில அளவை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி திட்டமிடல் என்பது குறைந்தது ஒரு பத்துவருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் 1951-ல் தான் பாரளுமன்ற நடவடிக்கைகள் துவங்கின. ஆக இந்த அணை முற்றிலும் ஆங்கிலேய ஆட்சியர்களாலும், பொறியியல் வல்லுநர்களாலும் திட்டமிடப்பட்டு கட்டுமானபணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

yt_middle


சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பலர் அந்த காலகட்டத்தில் பஞ்சத்தின் காரணமாக ஒரு நாள் வேலைக்கு ஒரு படி சோளம் கூலியாகப்பெற்றுக்கொண்டு கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடையில் ஒரு முறை காலரா போன்ற ஏதொ ஒரு நோய்த்தொற்று ஏற்ப்பட்டதால் பலர் திருப்பி வந்துவிட்டதாக வாய்வழி செய்தியும் கிடைக்கிறது.

சிறுமுகை, சத்தியமங்கலம், கோபி, பவானி மற்றும் ஈரோடை சுற்றியுள்ள பகுதிகளில் பாசனவசதி பவானியாற்றை நம்பியேயுள்ளது, அவை நஞ்சை நிலங்களாக திகழ்கிறது. ஆனால் பவானிசாகருக்கு தெற்க்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனையம்பள்ளி, புளியம்மட்டி பகுதிகளில் வரட்சி தாண்டவமாடியது. காரணம் அங்கு பவானி நதியின்மீது பட்டு வரும் காற்றுகூட படமுடியாதபடி மேட்டு நிலமாக இருந்தது. அங்கிருக்கும் மக்களுக்கு குடி நீர் பிரச்சினை வெகு காலம் தொடர்ந்திருக்கிறது. புளியம்பட்டி இன்னும் புஞ்சை புளியம்பட்டியாகவே இருக்கிறது. ஒரு சில தனவந்தர்கள் வீட்டில் ஆழ்குழாய் கிணறு இருக்கும். பெரும்பாலன வீடுகளில் குடிப்பதற்க்கு தண்ணீர் அருகிலுள்ள குட்டைகள் மற்றும் ஊர்க்கிணறுகளிலிருந்துதான் கிடைத்துக்கொண்டிருந்தது.

புளியம்பட்டி என்ற கிராமம்- ஊராட்சி வாரச்சந்தை என்ற ஒன்றை தன் பொருளாதாரமாக கொண்டிருந்தது. இந்த சந்தை தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக (பொள்ளாச்சிக்கு அடுத்து) இன்னும் திகழ்கிறது. இந்த சந்தையின் வியாபாரிகளாக பலர் இந்த ஊரில் தொழில் செய்துகொண்டிருக்கிரார்கள். சுதந்திரப்போராட்டம், சுதேசி போன்ற இயக்கங்களிலும் செயல்பாட்டிலும் இந்த ஊர்மக்கள் அதிகம் பங்கெடுத்திருக்கிறார்கள். விடுதலை போராட்ட நாயகன் திருப்பூர் குமரனின் உறவு முறைகள் பலர் இந்த ஊரில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவளர்கள் இந்த மண்ணில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விழைவால் பலர் நெசவை தொழிலாகவும் காதிபவன் போன்ற சுதேசி தொழில்கூட்டமைப்பில் பங்கெடுத்து நாடு முழுதிற்க்கும் கதராடை அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

பின்னர் திராவிட இயக்கத்தின் எழுச்சிகாரணமாக இளைய தலைமுறயினர் பெரியாரையும் அண்ணாவையும், கலைஞரையும் பின் தொடர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு, பகுத்தறிவு பாசறைகளில் பங்கேற்றனர். பல வீடுகளில் தாத்தாக்கள் காங்கிரஸ்காரர்களாகவும், மகன் மற்றும் பேரப்பிள்ளைகள் திமுக காரர்களாகவும் இருக்கிறார்கள். திராவிட அரசியலை அன்றய காலகட்டத்தில் இந்தப்பகுதியில் வளர்த்தவர்களில் முக்கியமானவரும் முதன்மையானவரும் இருந்தவர் பு.ஆ. சாமிநாதன் அவர்கள். பேராசிரியர் அன்பழகன் மற்றும் கலைஞரின் நம்பிக்கைகுறிய தலைவராக விளங்கியவர். கலைஞரால் இன்றும் நினைவுகூறப்படும் தன்மானப்பெருந்தகை PAS என அழைக்கப்படும் பு ஆ சாமிநாதன் அவர்கள்.

PAS அவர்கள் திமுக சார்பில் (1967-1971)-ல் ஒருமுறையும் (1971-1977)-ல் ஒரு முறையும் கோபி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமையத்தில் தன்னுடைய சொந்த கிராமத்தின் முதல் பிரச்சினையான குடிநீர்ப்பிரசைனையை தீர்ப்பதற்க்காக பேராசிரியர் மூலம் சட்டமன்றத்தில் ஒரு கோரிக்கையை அன்றய முதல்வர் கலைஞரின் முன் வைக்கச்செய்தார். அது பவானிசாகர் அணையிலிருந்து புஞ்சை புளியம்பட்டிக்கும் அதனைச்சார்ந்த கிராமங்களுக்கும் குழாய்மூலம் தண்ணீரைக்கொண்டுவந்து மேல் நிலை நீர்த்தொட்டியில் தேக்கிவைத்து பின் ஊர்மக்களுக்கு வினியோகம் செய்யும் திட்டமது. அந்த திட்டம் பல கட்ட கள ஆய்வுகளுக்குப்பின் எற்றுக்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டது. அந்த மிகமுக்கிய திட்டத்தினால்தான் வாழ்வதற்க்குகந்த ஊராக இல்லாமல் இருந்த புஞ்சை நிலம் வேறு மாநிலங்களிலிலிருந்தும், ஊர்களிலிருந்தும் மக்கள் பலர் வந்து தொழில் மற்றும் வர்த்தகம் செய்து வளரக்கூடிய இடமாக மாறியது. அதன் பின் மக்கள் தொகை பெருக்கத்தால் குடிநீர் தேவை மீண்டும் அதிகரிக்க இரண்டாவது குடி நீர்த்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இன்று எவ்வளவோ தொழில் வளர்ச்சி, கல்வி அறிவு பெற்று வளர்ந்துவிட்டாலும் புளியம்பட்டியையும் அதன் சுற்றுப்புறத்தைச்சேர்ந்த ஒவ்வொருவரும், முக்கியமாக இளம் தலை முறையினரும் தெரிந்து கொள்ளவேண்டியது மாமனிதர் பு ஆ சாமிநாதன் அவர்கள் முன்னெடுத்த குடிநீர் திட்டம் இந்த ஊரின் இன்றைய வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டது என்ற வரலாறுதான். அரசியல் மாட்சரியங்கள் கடந்து சிறந்த மனிதரான அவரை புஞ்சை புளியம்பட்டியின் பென்னிகுயிக் என்று அழைப்பது சாலப்பொருந்தும்.


yt_custom

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Telegram_Side
Twitter_Right
Insta_right
fb_right
mobile_App_right