கோவை சம்பவத்தை நினைவு படுத்திய தெலுங்கானா என்கவுண்டர்.....

 Friday, December 6, 2019  01:48 PM   No Comments

தெலங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவரை 4 பேர் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கி, கொன்று உடலை தீவைத்து எரித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பெரும் கைது செய்யப்பட்டனர். பிறகு இன்று அதிகாலை நால்வரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் இது சட்டத்தின் படி செயல்பட்டிருக்கவேண்யது என்றாலும் இந்த மாதிரியான மிருகங்களை இந்த மாதிரித்தான் சுடவேண்டும் என்றும் கூறுகின்றனர், அப்போதுதான் இந்த தப்பை செய்பவர்களுக்கு பயம் வரும் என்கின்றனர்.

இந்த சம்பவம் முதல்முறை இல்லை என்றாலும், இது போல கோவையிலும் நடந்தது எல்லோருக்கும் நினைவு வரலாம்..

ஒரு முறை சைலேந்திர பாபு அவர்கள் கோவையின் காவல் ஆணையராக இருந்தபோது நடந்த ஒரு என்கவுண்டர் சம்பவம் அனைவருக்கும் நினைவு வரலாம்..

அந்த சம்பவம்...

கோவையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திச் கொன்ற கொடூரன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில், பள்ளிக்குழந்தைகள் இருவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி மோகனகிருஷ்ணன், போலீஸ் 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டான். விசாரணைக்காக வேனில் அழைத்துச் சென்றபோது போலீசிடம் இருந்த துப்பாக்கியை பறித்து அவன் சுட, பதிலுக்கு போலீஸ் அதிகாரிகள் சுட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானான்.

கோவை, ரங்கேகவுடர் வீதியை சேர்ந்த முஸ்கன் என்ற பள்ளி மாணவியை காலை வாடகை வேனில் பள்ளிக்குச் செல்ல அனுப்பி வைத்தபோது இவ்விரு குழந்தைகளையும் உடுமலை அருகேயுள்ள தீபாலப்பட்டிக்கு கடத்திய அந்த நபர்கள், சிறுமி முஸ்கனை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின், குழந்தைகள் இருவரையும் அங்குள்ள பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரில் தள்ளி கொலை செய்தனர்.

பிறகு நடந்த விசாரணையில் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன்(37), இவனது கூட்டாளியான டிராக்டர் டிரைவர் மனோகரன்(23) ஆகியோரை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு இவர்களை நேரில் அழைத்துச் சென்று, 'சம்பவம் நடந்தது எப்படி?' என, விசாரிக்க திட்டமிட்ட போலீசார், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து உடுமலை நோக்கி அழைத்துச் சென்றனர்.மோகனகிருஷ்ணனை ஒரு வேனிலும், மனோகரனை மற்றொரு வேனிலும் அழைத்துச் சென்றனர். மோகனகிருஷ்ணன் இருந்த வேனில் அன்றைய இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்.ஐ.,க்கள் முத்துமாலை, ஜோதி இருந்தனர். மனோகரன் இருந்த வேனில், இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையிலான போலீசார் இருந்தனர்.

இவ்விரு வேனும் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சென்ற போது, ஈச்சனாரி ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இதனால், மாற்றுப்பாதையான போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டில் அழைத்துச் சென்றனர். மனோகரன் இருந்த வேன் முன்னால் செல்ல, மோகனகிருஷ்ணன் இருந்த வேன் பின் சென்று கொண்டிருந்தது.அங்குள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கு அருகே சென்றபோது, மோகனகிருஷ்ணன் திடீரென எஸ்.ஐ., ஜோதியிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறித்து, வேன் டிரைவர் ஏட்டு அண்ணாதுரையை நோக்கி நீட்டி, 'வேனை கேரளாவுக்கு ஓட்டிச்செல்...' என மிரட்ட, உடனிருந்த அதிகாரிகள் திடுக்கிட்டனர்.

நிலைமையை சமாளிக்க எஸ்.ஐ., முத்துமாலை தனது கைத்துப்பாக்கியை எடுக்க முயன்ற போது, மோகனகிருஷ்ணன் சரமாரியாக சுட்டான். ஒரு குண்டு எஸ்.ஐ., முத்துமாலையின் வயிற்றிலும், மற்றொரு குண்டு ஜோதியின் இடது கையிலும் பாய்ந்தது. போலீசார் நிலைகுலைந்ததை தொடர்ந்து, அவன் தப்பியோட முயன்றான்.

இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்.ஐ., முத்துமாலை ஆகியோர் சுதாரித்து துப்பாக்கியால் பதிலுக்கு சுட்டதில் மோகனகிருஷ்ணனின் நெற்றியில் இரு குண்டுகளும், மார்பில் ஒரு குண்டும் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். குண்டு பாய்ந்து காயமடைந்த எஸ்.ஐ.,கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர், கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அன்று திரு போலீஸ் கமிஷனராக திரு.சைலேந்திரபாபு அவர்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் நடவடிக்கையை பாராட்டும் விதமாக ரங்கேகவுடர் வீதி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ஜெயின் சமூகத்தினர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.

11 ஆண்டுக்கு பின் 2வது 'என்கவுன்டர்' :

கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் போது, திருமால் வீதியிலுள்ள தனியார் கட்டடத்தில் வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு அதிரடியாக நுழைந்து சோதனையிட முயன்ற போலீசார் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன.எஸ்.ஐ., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும், உள்ளே பதுக்கி வைத்திருந்த குண்டுகள் வெடித்ததிலும் ஐந்து பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு பின் 2001, ஆக., 29ல் ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோட்டிலுள்ள தொழிலதிபர் வீட்டில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நடந்தது.

அவ்வீட்டில் இரவில் புகுந்து பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க, அப்போதைய எஸ்.ஐ., பாலமுருகன் (தற்போது இன்ஸ்பெக்டர்) துப்பாக்கியால் சுட்டார். இதில், கொள்ளையன் கண்ணப்பன் என்பவனது காலில் குண்டு பாய்ந்து, சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்தான்.கடந்த 1998க்கு பின் கோவை நகரில் 11 ஆண்டுகளாக போலீஸ், 'என்கவுன்டர்' நடக்கவில்லை. நீண்டகாலத்துக்கு பின் நேற்று நடந்த, 'என்கவுன்டரில்', குழந்தைகள் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகனகிருஷ்ணன் சுட்டு கொள்ளப்பட்டது 'என்கவுன்டர்' வழக்காக பதிவு செய்யப்பட்டது.

தெலுங்கானாவில் இந்த சம்பவம் பற்றி கேட்டதும் கோவையில் நடந்த இந்த சம்பவங்கள் நினைவுக்கு வராமல் இல்லை....
Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right