கோவையில் - ஒரு மாணவன், ஒரு விதை, ஒரு மரம் - நிகழ்ச்சி

 Saturday, December 7, 2019  07:20 AM   No Comments

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக ஒரு மாணவன், ஒரு விதை, ஒரு மரம் - என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது, இதில் ஒவ்வொரு மாணவனும் மரத்தை நடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி மெட்ரிக் பள்ளியில் ஒரு மாணவன், ஒரு விதை, ஒரு மரம் - என்ற நிகழ்ச்சியை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரக்கன்று கொடுத்து நடப்பட்டது, அதனை பள்ளியிலேயே பராமரித்து பிறகு வீட்டிற்கு எடுத்து சென்று அதனை நடலாம்.

இதன் மூலம் மரம் நடுவது பற்றி பள்ளிமாணவர்களிடம் இருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பள்ளி தாளாளர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right