நாளை வால்பாறை சாலையில் Target Zero-வின் 78-வது வார களப்பணி;

 Saturday, December 7, 2019  11:30 AM   No Comments

விடாமுயற்சியுடன் ஒற்றை நோக்கத்துடன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் Target zero-வின் களப்பணி தற்போது 78 வாரங்களை எட்டியுள்ளது. வற்றாத வளத்தை கோடுக்கும் வால்பாறை மலைக்கு நுழைவாயிலாக இருப்பது ஆழியார் அணைப்பகுதி. சுற்றுலா பயணிகளின் வருகையால் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மக்காத குப்பைகள் பெருமளவில் காணப்படுகின்றன.

இதனை அகற்றும் பொருட்டு ஒரு இளைஞர் குழு களம் இறங்கியுள்ளது. Target zero என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆழியார் முதல் வால்பாறை வரையிலான சாலையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி வருகின்றனர். பெரும் சவாலான இம்முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பெரும் ஆதரவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நாளை 78-வது வாரமாக களப்பணி துவங்குகிறது.நாளை ஞாயிற்றுக்கிழமை 08/12/2019 டார்கெட் ஜூரோ குழுவின் சார்பில் வால்பாறை செல்லும் சாலையில் 15-வது கொண்டை ஊசி வளைவில் பிளாஸ்டிக் மற்றும் மக்காத பொருட்களை அப்புறப்படுத்தும் களப்பணி நடைபெறுகிறது. இக்களப்பணி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும்.

தொடர்புக்கு : 80723 79927Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right