கோவை சூலூர் தந்த சாதனை நாயகன் - இயக்குனர் மணிவண்ணன்

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
மணிவண்ணன் அவர்களது தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், ஜவுளி வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை. இருப்பினும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி வரை படித்த அவர், பலருடன் நட்பாக இருந்தார். அப்பொழுது அவருக்கு அறிமுகமானவரே, சத்யராஜ் அவர்கள். கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
இல்லற வாழ்க்கை
மணிவண்ணன் அவர்கள், செங்கமலம் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனும் ஒரு நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வாழ்க்கை
மணிவண்ணன் அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்தார். மேலும், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
திரையுலகப் பிரவேசம்
பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் அவர்கள், 1௦௦ பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவிற்கு அனுப்பினார். அவரது உள்ளார்வமிக்கத் தாக்கத்தை உணர்ந்த பாரதிராஜா அவர்கள், அவரை சந்திக்க விரும்பியதால், சென்னை சென்றார், மணிவண்ணன். மேலும், 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.

நடிகராக மணிவண்ணன்
ஒரு உதவி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்த மணிவண்ணன், பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக அவரது சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தி, அவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். அவர், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.
இறப்பு
இயக்குனராகத் தனது 50 வது படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், தனது 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது.
காலவரிசை
1954: தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.
1979: பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கம் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.
1989: ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.
1982: ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும்.
1994: அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
2006: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்த அவர், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார். நாம் தமிழர் கட்சியிலும் பணியாற்றியவர்.

Similar Post You May Like
-
கோவையில் ஊரடங்கு நேரத்தில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் உன்னத பெண்
Fri, May 15, 2020 No Comments Read More...கோவை நகரில் 25 வயதான மேகா ஜோஸ் என்னும் பெண் ஊரடங்கு காரணமாக உணவின்றி வாடும் 1500 தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.
-
உழைப்பால் உயர்ந்த அப்பநாய்க்கன்பட்டி புதூர் வேலுமணி -
கோவை அருகே ஏழை விவசாயியின் மகனாக பிறந்த வேலுமணி, மும்பை சென்று வாழ்க்கையை தொடங்கி, பல சவால்களைத் தாண்டி மாபெரும் வளர்ச்சி அடைந்த கதை! நம் உடலில் வெறும் 15 முதல் 20 கிராம் எடை மட்டுமே கொண்ட ஒரு சிறி
-
முக்கால் ஏக்கர் நிலத்தில் 30 வகை காய்கறிகள்... இயற்கை விவசாயத்தில் அசத்தும் கோவை கல்லூரிப் பேராசிரியர்!
இன்றைய தேதியில் விஷமில்லா காய்கறிகளின் நுகர்வு அதிகரித்துவருகிறது என்பது வெளிப்படையான உண்மை. அதேசமயம் இயற்கை அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் எல்லாம் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி விளை
