இது வேறு உலகம் ... மனதை மயக்கும் மசினக்குடி

 Friday, December 20, 2019  04:30 PM   No Comments

ஊட்டியில் இருந்து சுமார் 30 கி.மி தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம்..முதுமலை தேசிய பூங்காவின் நுழைவு பகுதியில் அமைந்துள்ளது இதன் சிறப்பு..மசினக்குடியில் மிதமான குளிர் நிலவும்..கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்,மசினக்குடியில் அதிகம் சுற்றி பார்க்க இடங்கள் இல்லை..4 மணி நேரமே போதுமானதாக இருக்கும்...3 மணி நேரத்திற்குள்ளாக மசினக்குடியில் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்துவிடலாம்..

ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைபகுதி வழியாக மசினகுடி செல்லும் சாலை மிகவும் அழகாகவும் ,சாலையின் இரண்டு பக்கமும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாக இருக்கும்..இதில் கல்லட்டி மலைபகுதி கொஞ்சம் அபாயகரமானதாகும்..இந்த பகுதியில் யானைகள் அதிகம் உலாவுவதால் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை..மற்றம் பள்ளதாக்கு மிகுந்த சாலை என்பதால் இரவு நேர பயணம் கொஞ்சம் கவனம் தேவை..செக்போஸ்டில் இருக்கும் வனத்துறை அதிகாரியை கொஞ்சம் கவனித்தால் இரவு நேர பயணத்தை தொடர்ந்து அங்குள்ள யானைகளின் தரிசனத்தை பீதியுடன் கண்டுகளிக்கலாம்...இனி மசினக்குடியில் பார்க்க வேண்டிய இடங்களை பார்கலாம்.

மோயார் வனப்பகுதி
சிங்காரா வனப்பகுதி
தெப்பகாடு யானைகள் முகாம்
முதுமலை தேசிய பூங்கா
பொக்காபுரம் வனப்பகுதி
பந்திப்பூர் தேசிய பூங்கா(Karnataka)

இனி மேலே சொன்ன இடங்களை விரிவாக காண்போம்..

1.மோயார் வனப்பகுதி:-

கல்லட்டி மலைபகுதி சாலையில் மலைபகுதியை விட்டு சமபகுதியில் வந்ததும் சாலையின் இரண்டு பக்கங்களும் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கும்..அந்த சாலையில் மெதுவாக பயணித்தால் மான்கள்,காட்டெருமைகளை,யானைகளை காணலாம்..அந்த சாலையில் வந்து கொண்டு இருந்தால் முதல் கிராமம் மாவனல்ல கிராமம் வரும் ..அங்கு சுட சுட எண்னெய் பலகாரங்கள் மற்றும் தேநீர் விடுதிகள் உங்களை வரவேற்க்கும்..அதன் பின்னர் அங்கிருந்து பயணித்தால் மசினக்குடி கிராமம் உங்களை வரவேற்க்கும்..கடைகள் நிறைந்துள்ள பகுதி,அந்த கடைகள் நிறைந்த பகுதியை தாண்டினால் இரண்டு பாதைகள் பிரியும் ..வலதுபக்கம் திரும்பி நேராக சென்றால் மோயார் வனப்பகுதி உங்களை வரவேற்க்கும்..அந்த மோயார் வனப்பகுதிக்கு 100 அடி முன்னால் டாஸ்மாக் கடை உங்களை வரவேற்க்க தூண்டும்...

அந்த டாஸ்மாக்கை தாண்டி சென்றால் அங்கிருந்து சுமார் 10 கிமி வரை அடர்ந்த காடுகள் செல்லும்,புலி,கரடி,மான்,யானைகள்,சிறுத்தைகள் வாழும் பகுதி என்பதால் கவனம் தேவை,நீங்கு இந்த பகுதிக்கு செல்லும் போது உங்கள் ராசி,அதிர்ஸ்டத்தை பொருத்து விலங்குகளை பார்க்கலாம்..நல்ல அதிர்ஸ்டகாரனாக நீங்கள் இருந்தால் புலியை காணலாம்..இரண்டு பக்கமும் அடர்ந்த காடுகளின் நடுவே பயணிக்கும் போது ஒரு திரில் அனுபவத்தை உணரலாம்..பெரும்பாலும் அதிகாலை நேரங்களில் இந்த பகுதியில் புலிகளை காணமுடியும்..மற்றும் மழை பெய்யும் நேரங்களில் யானைகளை காணமுடியும்..இந்த காட்டுவழியே பயணித்தால் அங்கு கடைசியாக மோயாரு நீர் தேக்க பகுதி வரும் அதன் அருகில் மோயார் நீர் மின் திட்ட பணியாளர்களின் குடியிருப்பு இருக்கும் ..அதுவரை மட்டுமே அனுமதி அதன் பின்னர் கரனாடகா எல்லை பகுதி தொடங்கி விடுவதால் அனுமதி இல்லை..

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இந்த பகுதியில் செல்ல திட்டம் வைத்துக்கொள்ளுங்கள்
இப்பகுதிக்கு ஜீப்பில் செல்ல ஒரு நபருக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிப்பார்கள்,
ஜீப்பில் சென்று பணத்தை விரயம் செய்யாமல் நீங்கள் வந்த வாகனத்தில் இப்பகுதிக்கு செல்லுங்கள்..
அங்குள்ள ஜீப் டிரைவர்கள் ' ஜீப்பில் செல்ல மட்டுமே அனுமதி உள்ளதாகவும்,வேறு வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனவும் மீறி சென்றால் வனத்துறை அபராதம் விதிப்பார்கள் என்றும் 'கதை கதையாக அளந்து விடுவார்கள்...அதை நம்பாமல் நீங்கள் வரும் வாகங்களில் செல்லுங்கள் ..வனத்துறையின் சார்பில் எந்த வித தடையும் இல்லை..

2.சிங்காரா வனப்பகுதி:மசினக்குடி கடைவீதியின் அடுத்து இடதுபுறம் திரும்பினால் சிங்காரா வனப்பகுதி..
வலதுபுறம் மோயார் வனப்பகுதி
இடதுபுறம் சிங்காரா வனப்பகுதி.

சிறிது தூரம் வரை வீடுகள் தென்படும்,காட்டேஜ்களும் உள்ளது,மோயாரில் இருப்பது போன்று இங்கும் அடர்ந்த காடுகள் அதே புலி, சிறுத்தை, யானைகள், கரடிகள், காட்டெருமைகள், காட்டுபன்றிகள் போன்ற விலங்குகள் நடமாடும் பகுதி..இந்த பகுதியில் கண்டிப்பாக அதிகாலை வேளைகளில் புலி,யானையை காணலாம்..சுமார் 7 கிமி தூரம் செல்லும் இந்த காடுகள் நிறைந்த சாலை கடைசியில் சிங்காரா மின் நிலையம் வரை செல்லும் அதன் பின்னர் அடர்ந்த காடுகள் கொண்ட மலைகள் தொடரும்..சிங்காரா வனப்பகுதி மோயார் வனத்தை காட்டிலும் கொஞ்சம் அழகாக இருக்கும்..அந்த காட்டு சாலையில் செல்லும் வழியில் ஒர் இடத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கும் இந்த தண்நீர் சிங்காரா மலைபகுதியில் இருந்து வரும் அருவி தண்ணீராகும்..இங்கு குளிக்கலாம்..அதிகாலை வேளைகளில் இங்கு குளிப்பது மிகவும் ஆபத்தானது,வனவிலங்குகள் தாகம் தணிக்க வரும் என்பதால் மதிய வேலைகளில் இங்கு குளிக்கலாம்..அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி என்பதால் புகைப்படம் எடுக்க நல்ல இடமாகும்..

இங்கு செல்லவும் ஜீப் டிரைவர்கள் அனுமதி இல்லை என்று சொல்லி நம்மை குளப்புவார்கள்...இங்கு செல்ல எந்த தடையும் இல்லை...மசினக்குடியில் தங்குவதற்க்கு நிறைய காட்டேஜ்கள் உள்ளன..இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன..வனப்பகுதியில் அல்லது சாலையிம் ஒரம் நின்று அல்லது வாகனத்தில் உள்ளே இருந்து கொண்டு மதுபானங்களை குடித்து மாட்டிக்கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் வனத்துறையினர் அல்லது காவல் துறையினர்..எனவே ஆக சிறந்த வழி ரூம் போட்டு சரக்கடிப்பதே...சிங்கார வனப்பகுதியில் Innthewild என்ற ஆடம்பர சொகுசு தங்கும் விடுதி உள்ளது அடர்ந்த காட்டில் உள்ள இந்த விடுதியில் தங்குவதற்க்கு ரூ.7000 கட்டணம்...அதற்கு ஏற்றவாறு காடுகளின் மத்தியில் தனித்தனி விடுதிகள் உள்ளது...புலிகள்,கரடிகள் தங்கி இருக்கும் இடத்திற்க்கு பக்கத்திலேயே உலாவும்...மிகவும் திரில்லான விடுதி

3.பொக்காபுரம் வனப்பகுதி:-

மசினக்குடிக்கு முன்னதாக இடது புறமாக ஒரு 12 கிமி தொலைவில் அடர்ந்த காடுகள் கொண்ட மலைகளின் அடிவார பகுதியில் அமைந்துள்ள அழகான கிராமம் ஆகும்...இந்த கிராமத்திற்க்கு செல்லும் பகுதி இரண்டுபக்கமும் காடுகள் நிறைந்த சமவெளி பகுதி..இந்த கிராமதை தாண்டி மலை ஆரம்பமாகிறது அந்த மலையடிவாரத்தில் பல சொகுசு விடுதிகள் உள்ளன..கிளப் மகிந்திரா சொகுசு விடுதியும் இங்குள்ளது..இந்த சொகுசு விடுதி அமைந்துள்ள பகுதி மலையடிவார பகுதி என்பதால் புலி மற்றும் கரடி,சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருக்கும்...இங்குள்ள சொகுசுவிடுதிகாரர்கள் வனத்துறை அதிகாரிகளை கவனித்துவிட்டு தங்களது சொகுசு விடுதி சுற்றுலாவாசிகளை அடர்ந்த காட்டுக்குள் டிரெக்கிங் மற்றும் வனவிலங்குகளை கான சிறப்பு வசதிகளை செய்து கொடுக்கிறார்கள்,வனத்துறை மட்டுமே செல்லக்கூடிய அடர்ந்த காட்டுபகுதிக்கு கூட்டி சென்று புலி மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகளை காண்பிக்கிறார்கள்...இதற்க்கு தனிகட்டணம் ...பொக்காபுரம் செல்லும் வழியெங்கும் காடுபகுதி என்பதால் போகும் வழியில் அதிர்ஸ்டம் இருந்தால் புலியை பார்கலாம்..

4.தெப்பக்காடு யானைகள் முகாம்:-

மசினக்குடியில் இருந்து சுமார் 15 கிமி தொலைவில் சாலையின் இடது புறம் அமைந்துள்ள இந்த யானைகள் முகாமில் யானை சாவாரி செய்யலாம்..யானைகளை பராமரிக்கும் முறை பற்றி அறியலாம்.இங்கு செல்வதற்க்கு கட்டணம் உண்டு..மசினக்குடியில் இருந்து இந்த முகாமிற்க்கு வரும் வழி மிகுந்த காடுகள் நிறைந்த பகுதி..முதுமலை தேசிய பூங்காவில் அமைந்துள்ள் இந்த தெப்பகாடு குழந்தைகளுக்கு ஏற்ற இடமாகும்..யானை சாவாரியை தவிர்த்து இங்கு வேறு எதுவும் இல்லை..மலையடிவார பகுதிகளின் கிராமங்களில் அடிக்கடி தொந்தரவு செய்யும் காட்டுயானைகளை பிடித்து வந்து கும்கி யானைகளாக மாற்றுவது இந்த தெப்பகாட்டு முகாமில்தான்..கும்கி யானைகளுக்கு பயிற்சி கொடுத்து அவற்றிக்கு நல்ல உணவுகள் வழங்கபடுகிறது..

5.முதுமலை தேசிய பூங்கா:-

தெப்பகாட்டு முகாம் அருகில் மைசூர் சாலை பிரியும் இடத்தில் முதுமலை காடுகளை சுற்றிபார்க்க ஜீப் வசதி உள்ளது..இந்த முதுமலை காடுகளை சுற்றி பார்க்க கண்டிப்பாக ஜீப்பில் மட்டுமே செல்ல முடியும்..மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை..பரந்து விரிந்த இந்த முதுமலை காடுகளில் புலி,சிறுத்தை,யானை மற்றும் இதர விலங்குகள் இருக்கின்றன..யானைகளை ஜீப் சவாரியின் போது கண்டிப்பாக பார்கலாம்..ஜீப் சவாரிக்கு 300 முதல் 600 வரை கட்டணம் வசூலிக்கபடுகிறது..இங்கும் அதிர்ஸ்டம் இருந்தால் புலியை பார்கலாம்..மேலும் அதிர்ஸ்டம் இருந்தால் கருஞ்சிறுத்தையை காணலாம்...பெரும்பாலும் இந்த ஜீப் சவாரியின் போது யானைகள் மற்றும் மயில்கள்,காட்டெருமைகள்,காட்டுபன்றிகள்,மான்கள மட்டும் காணலாம்...ஜீப் டிரைவர்களுக்கு எக்ஸ்டரா பணம் கொடுத்தால் அடர்ந்த காட்டுபகுதிகளுக்கு கூட்டி செல்வார்கள்.. அடர்ந்த காடுகளை சுற்றிபார்கும் திரில் அனுபவம் கண்டிப்பாக இருக்கும்..

இப்பகுதியில் தங்குவதற்க்கு தமிழ்நாடு ஹோட்டல் உள்ளது..மற்றும் தெப்பகாட்டில் இருந்து கூடலூர் செல்லும் அடர்ந்த காட்டுசாலையில் வனத்துறையில் சார்பில் செயல்படும் பீக்காக் டார்மிட்டரி உள்ளது ,இங்கு தங்குவதற்க்கு கட்டணம் நபருக்கு ரூ.150 ..காடுகளின் மத்தியில் உள்ள இந்த டார்மிட்டரில் தங்குவது திரில் அனுபவத்தை தரும்...

6.பந்திப்பூர் தேசிய பூங்கா:-

இது கர்னாடகத்தில் அமைந்துள்ள இந்த பந்திப்பூர் தேசிய பூங்காவில் அதிக அளவில் புலிகள் மற்றும் சிறுத்தைகள்,யானைகள் மற்றும் இதர விலங்குகள் உள்ளது..தெப்பகாட்டில் இருந்து வலது புற சாலையில் மைசூர் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த பந்திப்பூரில் வனத்துறை சார்பாக வனத்துறை வாகனங்களில் காட்டுக்குள் சவாரி கூட்டி செல்கிறார்கள்..காலை 6.30 மணி முதல் காலை 9.30 வரை மற்றும் மாலை 3.30 முதல் மாலை 6.30 வரை மட்டுமே சாவரிக்கு கூட்டி செல்கிறார்கள்..

-- நன்றி http://rockfortcorp.blogspot.comSimilar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right