TMB வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 Tamil.samayam  Tuesday, January 14, 2020  11:32 AM   No Comments

TMB எனப்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (Tamil Nad Mercantile Bank) காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TMB Recruitment 2020 வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக TMB வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tmbnet.in/ என்ற பக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, பொது மேலாளர், துணை பொது மேலாளர் ஆகிய காலிப்பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

காலியிடங்கள்:
பொது மேலாளர் - 1
துணை பொது மேலாளர் - 1
உதவி பொது மேலாளர் - 1


பதவி 1: General Manager (IT/CTO)
கல்வித்தகுதி: பி.இ, எம்சிஏ, அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.1,40,000. ஊதியம் தவிர்த்து வீட்டு வாடகை, கார் வசதி சலுகைகள் உண்டு.
அனுபவம்: ஐடி துறையில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

பதவி 2: Deputy General Manager (IT)
தகுதி: வங்கிகளில் ஐடி பிரிவில் 2 ஆண்டுகள் துணை மேலாளர், உதவி மேலாளராக பணிபுரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ.1,25,000
வயது வரம்பு: 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

பதவி 3: Assistant General Manager (IT)
தகுதி: 2 ஆண்டுகள் உதவி பொது மேலாளராக பணி புரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.1,00,000
வயது வரம்பு: 45வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் மேலாளர், துணை மேலாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் எப்போது நடைபெறும் என்பது பற்றிய விபரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://www.tmbnet.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஜனவரி 24 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road,
Thoothukudi 628 002



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

mobile_App_right
Twitter_Right
Insta_right
fb_right
Telegram_Side