கொரோனா பீதி; கேரளாவில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.

 Thursday, March 12, 2020  11:57 AM   No Comments

கேரளாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து கோவை வரும் அரசு பஸ்கள், ரெயில்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.கோவை - கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ குழுவினர், சுகாதார துறையினர் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் பஸ், கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனை செய்கின்றனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக கேரளாவில் இருந்து பஸ்சில் வரும் பயணிகள் மாஸ்க் அணிந்தபடியே வருகின்றனர்.

கோவை ரெயில் நிலையத்தில் கேரளாவுக்கு செல்லும் ரெயில், அங்கிருந்து கோவை வரும் ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக வால்பாறை அருகே கேரளா செல்லும் சாலையில் உள்ள வாழைச்சால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் நீர்வீழ்ச்சிகள் மூடப்பட்டதால் அந்த சாலையில் தற்போது வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. நேற்று முதல் பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் அடைக்கப்பட்டது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel