பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அடுத்த 1 மாதம்

 Wednesday, March 18, 2020  10:37 AM   No Comments

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்து விட்ட இந்த வைரஸ் தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது தமிழக அரசு.

தமிழகம் முழுவதும் பொது மக்கள் கூடும் இடங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்கள், திரையரங்கங்கள், கேளிக்கை விடுதிகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பொது வெளியில் செல்லும் பொது முகக்கவசங்களை பயன்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது அரசு. சில நாட்களாக மக்களின் வாழ்கை முறையே மாறியுள்ளது எனலாம்.

வேண்டும் ஒத்துழைப்பு :

அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, பொது இடங்களில் கிருமி நாசினிகள் தெளிப்பது, பொது இடங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகள் செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைள் செய்யப்படுகிறது. பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டியது அவசியம் ஆகும். மருத்துவ பரிசோதனையின் போது கடந்த நாட்களில் வேறு மாநிலத்திற்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று வந்ததை மறைக்காமல் தெரிவிக்கவேண்டும், மேலும் தனக்கு உடலில் வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருக்கிறதா எனவும் மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும்.சுத்தம் அவசியம் :

பொது வெளியில் சென்று வந்தாலோ அல்லது வேலைகள் செய்தாலோ கிருமி நாசினி வைத்து கைகளை சுத்தம் செய்து கொள்வது மிக அவசியம் ஆகும், யாருக்கேனும் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும், அவரிடம் இருந்து குறைந்தது 1 மீட்டர் தூரமாவது தள்ளி இருக்கவேண்டும். முக்கியமாக முகவசங்களை அணிவது நல்லது.

முக்கிமான அடுத்த 1 மாதம் :

பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த உயிர் கொல்லி வைரஸ்சை விரட்ட முடியாது, அதனால் அரசாங்கம் எடுக்கும் அனைத்து தடுப்பு நடவடிகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும், மற்றும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவா வண்ணம் அவர்களிடம் இருந்து தூரத்தை கடைபிடிக்க வேண்டும், அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் பொதுவெளியில் அதிகமாக நடமாட்டம் இல்லாமல் இருக்கவேண்டும். இந்த வைரஸ்சை ஒழிக்க தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் இதனை ஒழிக்க, இது பரவாமல் பாதுகாப்பதே நிரந்தமான வழி, அதனால் பொது மக்கள் இதனை உணர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் அடுத்த 1 மாதம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

-- நொய்யல் மீடியாSimilar Post You May Like

 • கொரோனாவின் பிடியில் கோவை மற்றும் சேலம்

   Fri, September 25, 2020 No Comments Read More...

  தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும

 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் பலி

   Sat, September 19, 2020 No Comments Read More...

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ப

 • மலம்புழா அணை... கேரளத்துக்குத் தமிழர்கள் அளித்த கொடை!

   Tue, September 15, 2020 No Comments Read More...

  நாட்டின் தற்போதைய தலையாயப் பிரச்னை, தண்ணீர். தென் மாநிலங்களில் கேரளா மட்டுமே தண்ணீர் நிறைவுபெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. கேரளா முழுவதுமே சிறியதும் பெரியதுமாக ஆறுகள் ஓடி, அந்த மாநிலத்தை வளப்படுத்துகின்ற
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right