உயிர் வாழவேண்டுமா? அடுத்த 3 வாரங்கள் வீட்டிலேயே இருங்கள்...

 Wednesday, March 25, 2020  02:58 PM   No Comments

இந்தியா முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் தமிழகமும் இதற்கு விதிவிலக்கில்லை. கோவையிலும் இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் தீவிரமாக எடுத்துவருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண ஒரே வழி அதுதான் தனிமைப்படுத்துதல். கொரோனா நோய் தொற்று இருப்பவரோ அல்லது அதற்கான அறிகுறி உள்ளவர்களோ.. தங்களை தனிமை படுத்திக்கொள்வதன் மூலம் அதனை கட்டுப்படுத்தமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதற்காகத்தான் இந்திய அரசும் தமிழக அரசும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளன. இதனை விளையாட்டாக எடுத்து கொள்ளாமல் ஒவ்வொருவரும் தனது குடும்பத்தின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கூட்டமாக எங்கும் சேராமல், தங்களையும் தங்களை சேர்ந்தவர்களையும் கிருமி நாசினி மூலம் கைகளை கழுவச்சொல்வதும், முகத்தில் மாஸ்குகளை போடச்சொல்வதும் முக்கியமாகும்.கொரோனா பாதிப்பில் இருந்து, நாம் ஒவ்வொருவரும் உயிர் தப்ப முடியும்; நம் குடும்பத்தினரையும் காப்பாற்றலாம்.
இதை வலியுறுத்தும் விதமாக, 'வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீர்கள்' என அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆகவே மேலும் பரவாமல் கட்டுப்படுத்த, அடுத்த மூன்று வாரங்கள், நாம் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் நம்மை, நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right