கோவையில் கடைவீதி காய்கறி சந்தைகளில் அதிகாலையில் குவியும் மக்கள்..

 Thursday, March 26, 2020  07:01 AM   No Comments

கோவையில் கடைவீதி காய்கறி சந்தைகளில் அதிகாலையில் குவியும் மக்கள்; நோய் தோற்று அபாயம்

144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது, சமூக இடைவெளி அவசியம் என அரசு வலியுறுத்திய போதும் கோவையில் உள்ள கடைவீதி காய்கறி சந்தைகளில் அதிகாலையில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீன் கடைகள், காய்கறிகள், மளிகை, பால் போன்றவைகளுக்கு தடை இல்லை, இருப்பினும் மக்கள் கூட்டம் கூட்டமாக வராமல் இடைவெளியுடன் பொருட்களை வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு நகரில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர், தியாகி குமரன் மார்க்கெட் பல்வேறு காய்கறி சந்தைகளில் மக்கள் சர்வ சாதாரணமாக, கும்பலாக சேர்ந்து காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர். இதனால் நோய்த் தொற்று எளிதில் பரவும் நிலை உள்ளது.இங்கு மாா்க்கெட்டுக்கு மட்டும் நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். அதிகமாக கூடும் மக்களை ஒழுங்குபடுத்தவோ, வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்லவோ எவ்வித ஏற்பாடும் செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்த சூழ்நிலை குறித்து, கோவை மாவட்ட ஆட்சியரிடமோ, அல்லது மாநகராட்சி அதிகாரிகளிடமோ கலந்து பேசி வாடிக்கையாளா்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் இருக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்க இருக்கிறோம். என்று தியாகி குமரன் மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராஜேந்திரன் தினமணி நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right