கோவையில் கடந்த 6 நாட்களில் மொத்தம் 100 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி

 Sunday, June 21, 2020  07:01 PM   No Comments

கோவையில் இன்று (ஜூன்-21) ஒரேநாளில் 12 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது.

கோவை சவுரிபாளையம் சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, அரக்கோணத்தில் இருந்து ரயில் மூலம் வந்த பொள்ளாச்சியை சேர்ந்த 32 வயது பெண், காந்திபுரத்தை சேர்ந்த 41 மற்றும் 54 வயது ஆண்களுக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்களை தற்போது கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

yt_middle


கோவை நகைக்கடையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அன்னூரில் ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் உள்பட மொத்தம் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

கடந்த 6 நாட்களில் மொத்தம் 100 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


yt_custom

Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Twitter_Right
Telegram_Side
Insta_right
fb_right
mobile_App_right