கோவைக்கு சிறப்பு சேர்க்கும் - ஜெயின் கோவில்

 Tuesday, June 23, 2020  07:09 AM   No Comments

பக்தி என்னும் எண்ணத்தினால் சூழபட்ட பக்தி குளமாகிய தேவாதி தேவர்களின் அன்பினால் நிறைந்த புனித பூமியாகிய தென்னிந்தியா பிரதேசத்தில் உள்ள தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான வியாபார நகரமாகிய கோயம்புத்தூரில் உள்ள ரங்கே கௌண்டர் தெருவில் ஸ்ரீ ராஜஸ்தான் ஜைன ஸ்வேதம்பர் மூர்த்தி பூஜக்(உருவ வழிபாடு பூஜை) சங்கத்தினர் புனிதாமான பரந்த பூமி வளாகத்தில் ஒரு பிரமாண்டமான சித்திர வேலைபாடுள் மற்றும் குளிர்ந்த நிலவு போல் கண்ணை கவரும் மேற்கிந்திய அழகிய வெள்ளைநிற பிரகாசமான பளிங்கு கற்களினால் ஆகாயத்தை ஈர்க்கக்கூடிய வசீகரமான சிகரம் போல் ஜைன கோவில் நிறுவப்பட்டுள்ளது.

நவீனமான இந்த ஆலயம ஜைனதுவதின் கடவுள்களின் ஒருமித்த உருவங்களை பிரதிபலிக்கும் இந்து மதத்தின் மூர்த்திகளின் கண்காட்சி ஒரு எடுத்துகாட்டகவும் ஜைன கோவிலின் சித்திர கலைகள் மனதை ஈர்க்கும்படியாகவும்,வாஸ்து கலைக்கு ஒரு கடலாகவும் இணையற்ற எடுத்துகாட்டகவும் விளங்குகிறது. நவீன தேவாலயம் மூல நாயகன் பகவான் ஸ்ரீ சுபாஸ்ர்வநாத் சுவாமி அவார் இவர் மக்களின் பிரகாசமான வாழ்வுக்கும் வளர்ச்சிகளும் அன்பை பொழிபவரகவும் வீற்றிருக்கிறார்.

yt_middle


இந்த பிரமாண்ட கோவில் 101 அடி நிளமும் 41 அடி அகலமும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இங்கு பஞ்ச உலோகத்தால் ஆனா கிரஹ சிலைகளும் உள்ளது.கர்ப கிரஹதிற்கு வெளியே மூல நாயகன் ஸ்ரீ சுபர்ஸ்வநாத் பகவானின் அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீ மாதங்யக் மற்றும் அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீ சாந்தி தேவி ஆகிய இரண்டு அழகிய அமைதி அளிக்கு பெண் தெய்வங்களும் விற்றிருக்கின்றன.

புகழ்மிக்க கோயம்புத்தூர் நகரின் அழகிய உற்சாகம் மிக்க தட்பவெட்ப சூழ்நிலையில் பூஜைக்கும் வணக்கத்திற்கும் உரிய ஆட்சாரிய பகவான் ஆன்மிகவாதி ஸ்ரீமத் விஜயகாலபுர்ன சுரிஸ்வர்ஜி,மகராஜ் சாஹிப் சுப்பிரீயர் ஸ்ரீ கால பிரம்ம விஜய ஜி மற்றும் பலரால் புனித நாளில் 9.12.1996 அன்று காலை சூரியோதய வேலையில் 8.00 மணி 11 நிமிடத்தில் கும்பாபிஷேகம் நிறைவேறியது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Insta_right
Telegram_Side
mobile_App_right
Twitter_Right
fb_right