ஜூலை மாதம் 4 ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு !! தமிழக அரசு

 newstm.in  Monday, June 29, 2020  10:31 PM   No Comments

தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ளது.


yt_custom

இந்தநிலையில், ஜூலை 31-ம் தேதிவரை தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், சில கட்டுப்பாடுகளையும் பிறப்பித்துள்ளது.

ஜூலை மாதங்களில் வரும் 5-7-2020, 12-7-2020, 19-7-2020, 26-7-2020 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து ஜூலை மாதம் 15-ம் தேதிவரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


yt_middle

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Insta_right
mobile_App_right
Telegram_Side
Twitter_Right
fb_right