இன்றைய தினம் - ஜூன் 30

 Tuesday, June 30, 2020  08:05 AM   No Comments

சர்வதேச விண்கற்கள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30-ம் நாள் சர்வதேச விண்கற்கள் காணும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. அன்று வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்பட்டால் நாம் பூமியை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் காணலாம். தினந்தோறும் கோடிக்கணக்கான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 1908 ஆம் ஆண்டு, ஜூன் 30 இல் விஞ்ஞானிகளால் அறியப்பட்ட தகவல். சுமார் 70 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல், 2000 சதுர கி.மீ பரப்பளவுள்ள சைபீரியன் காட்டை அழித்தது. அதுவும் இந்த கல் பூமியில் மோதவில்லை. மாறாக, அது பூமியை நோக்கி பயணித்த வழியில் பூமியிலிருந்து 5 கி.மீ உயரத்தில் சைபீரியன் காட்டின் மேல் வெடித்தது. எனவே தான் ஜூன் 30 உலக விண்கற்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

1937 - உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1960 - கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1972 - ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது.

1997 - முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.

2002 - பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.1921 – கோ. விவேகானந்தன், தமிழக எழுத்தாளர் பிறந்த தினம்

1967 – அரவிந்த்சாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பிறந்த தினம்

1969 – சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாளர் பிறந்த தினம்

1985 – மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர் பிறந்த தினம்

1917 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் நினைவு தினம்

1945 – அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தென்னிந்தியக் கருநாடக இசைக் கலைஞர் நினைவு தினம்

1948 – புதுமைப்பித்தன், தமிழக எழுத்தாளர் நினைவு தினம்Similar Post You May Like

 • இன்றைய தினம் - டிசம்பர் 26

   Sat, December 26, 2020 No Comments Read More...

  சுனாமி பேரலை தாக்கிய தினம் 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடு

 • இன்றைய தினம் - நவம்பர் 24

   Tue, November 24, 2020 No Comments Read More...

  படிவளர்ச்சி நாள் படிவளர்ச்சி நாள் (Evolution Day) என்பது உயிரங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும். இது நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1859 ஆம் ஆண்டில் இதே நாளில் சார

 • இன்றைய தினம் -- செப்டம்பர் 29

   Tue, September 29, 2020 No Comments Read More...

  1885 - உலகின் முதலாவது மின்சார திராம் (Tram) வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது. 1916 - ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார். 1833 - மூன்று வயதுள்ள இரண்டாம் இச
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right