கோவையில் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காகும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

 Tuesday, June 30, 2020  08:14 AM   No Comments

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் வரும் ஜூலை மாதத்தில் தற்போதைய நிலையை விட அதன் பாதிப்பு 2 மடங்காக அதிகரிக்கும் அதாவது பாதிப்பு 1000-ஐ கடக்கும் என தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் பொதுப்போக்குவரது துவங்குவதற்கு முன்பு 146 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 மாதங்களாக நோய்த்தொற்று எதுவும் ஏற்படாமல் நீடித்தது. ஆனால் விமானம், ரயில் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து துவங்கப்பட்டதன் காரணமாக கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியது.

yt_custom


கோவையில் முதன்முதலில் கடந்த மார்ச், 19ம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிறகு கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. இன்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 528 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜூலை மாதத்தில் கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, 2 மடங்காக உயரும் என ஐ.சி.எம்.ஆர்., கணித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, சுகாதார துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


yt_middle

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Twitter_Right
Telegram_Side
fb_right
Insta_right
mobile_App_right