கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது - பொது சுகாதாரத் துறை

 Tuesday, June 30, 2020  08:20 AM   No Comments

கோவையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் தெரிவித்தார்.

கோவையில் மே மாதத்தில் குறைந்திருந்த கொரோனா நோய்த் தொற்று பரவல் ஜூன் முதல் வாரத்தில் இருந்து மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க கேட்டுக்கொள்ளட்டுள்ளது.

yt_middle


இந்த நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

'கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பான நடவடிக்கையால் தான் கரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் தற்போது 4 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரும் காலத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மேலும் 4 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ' அதிகாரிகள் கூறினர்


yt_custom

Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Twitter_Right
fb_right
mobile_App_right
Insta_right
Telegram_Side