கோத்தகிரியில் 11 வயது சிறுமி உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று

 Tuesday, June 30, 2020  08:28 AM   No Comments

நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி பகுதியில் 11 வயது சிறுமி மற்றும் 61 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காம்பாய் கடை - காளவாய் பகுதியில், 2 நாட்களுக்கு முன்பு, ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

yt_custom


இந்நிலையில், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது . அதில் மேலும் 2 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 61 வயது பெண், மற்றும் 11 வயது சிறுமி ஆகியோருக்கும் தொற்று உறுதியாகி உள்ளதால் 2 பேரும் மருத்துவமனைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வசித்து வந்த குடியிருப்புகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது. அந்த வீதி மூடப்பட்டு அப்பகுதியில் மக்கள் நடமாட தடைவிதிக்கப்பட்டது.


yt_middle

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Insta_right
fb_right
Twitter_Right
mobile_App_right
Telegram_Side