இன்றைய தினம் - ஜூலை 1 - தேசிய மருத்துவர்கள் நாள்

 Wednesday, July 1, 2020  07:51 AM   No Comments

தேசிய மருத்துவர்கள் நாள்

தன்னலம் பாராமல் பிறர் நலம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுபவர்கள் மருத்துவர்கள். நோய்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்களின் பணி மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. `கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள்...' என்று எல்லோருமே சொல்லும் ரியல் ஹீரோக்கள் மருத்துவர்கள்தாம்.... இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

1961 – கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003) பிறந்த தினம்

1837 – இங்கிலாந்து, மற்றும் வேல்சில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.

1843 – மதராஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1874 – முதலாவது வணிகரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.

1903 – முதலாவது தூர் த பிரான்சு மிதிவண்டிப் பந்தயம் இடம்பெற்றது.

1942 – இரண்டாம் உலகப் போர்: முதலாம் அல்-அலமைன் சண்டை ஆரம்பமானது.

1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.

1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது.

yt_middle


1980 – 'ஓ கனடா' அதிகாரபூர்வமாக கனடாவின் நாட்டுப்பண்ணாக அங்கீகரிக்கப்பட்டது.

2002 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.

2013 – நெப்டியூனின் எஸ்/2004 என் 1 நிலவு கண்டுபிடிக்கப்பட்டது.

1906 – புலவர் குழந்தை, தமிழகத் தமிழறிஞர், புலவர் (இ. 1972) பிறந்த தினம்

1927 – சந்திரசேகர், இந்தியாவின் 11வது பிரதமர் (இ. 2007) பிறந்த தினம்

1934 – தாமரைக்கண்ணன், தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆய்வாளர் (இ. 2011) பிறந்த தினம்

1935 – ஞானி, தமிழக எழுத்தாளர் பிறந்த தினம்

1935 – டி. ஜி. எஸ். தினகரன், இந்திய கிறித்தவ மறைபரப்புனர் (இ. 2008) பிறந்த தினம்

1938 – துரைமுருகன், தமிழக அரசியல்வாதி, வழக்கறிஞர் பிறந்த தினம்

1949 – வெங்கையா நாயுடு, இந்திய அரசியல்வாதி பிறந்த தினம்

1961 – டயானா, வேல்ஸ் இளவரசி (இ. 1997) பிறந்த தினம்


yt_custom

Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஜூலை 13

   Mon, July 13, 2020 No Comments Read More...

  1953 – கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த தினம் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். இதுவரை 6000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதேபோல் கள்ளிக்காட்டு

 • இன்றைய தினம் - ஜூலை 12

   Sun, July 12, 2020 No Comments Read More...

  பை (π) நாள் பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண

 • இன்றைய தினம் - ஜூலை 11

   Sat, July 11, 2020 No Comments Read More...

  உலக மக்கள் தொகை நாள் உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய ந
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Twitter_Right
mobile_App_right
Telegram_Side
Insta_right
fb_right