செப்டம்பர் 19-ம் தேதி ஐ.பி.எல் தொடங்குகிறது; ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என அறிவிப்பு

 Friday, July 24, 2020  01:45 PM   No Comments

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 8 ந்தேதிவரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. மேலும் ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது.


yt_middle

இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 (சனிக்கிழமை) தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். மொத்தம் போட்டிகள் 51 நாட்கள் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்துள்ளார்.


yt_custom

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Telegram_Side
mobile_App_right
Twitter_Right
fb_right
Insta_right