ஆங்கிலேயரை திக்குமுக்காட வைத்த தீரன் சின்னமலை பற்றிய வரலாற்று குறிப்புகள்!!!

 Friday, July 31, 2020  06:49 AM   No Comments

இன்றைய ஈரோடு மாவட்டத்தின் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் இரத்தினசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா எனும் தம்பதியருக்கு மகனாக 1756ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17நாள் பிறந்தார் தீரன் சின்னமலை.

இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழையக் கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூறப்படுகிறது. இதனால் இவர் இளம் பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இளம் வயது முதலே வீரமும், தைரியமும் அதிகமாக கொண்டு வளர்ந்தவர்.

ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சில வீரர்களில் இவரும் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, இவரது சில வரலாற்று குறிப்புகள் பற்றி காண்போம்....

போர் பயிற்சிகள் கற்றுத்தேர்ந்த தீர்த்தகிரி போர் பயிற்சிகள் கற்றுத்தேர்ந்த தீர்த்தகிரி தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.

ஏழைகளுக்கு உதவி

கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியின் கீழ் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு கொடுத்து உதவினார்.

சின்னமலை பெயர் காரணம்

வரிப் பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு கொடுத்த அந்த சமயத்தில், வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினாராம். அன்று முதல் தீர்த்தகிரிக்கு 'சின்னமலை' என்ற புனைப்பெயராக இருந்து வருவதாக கருத்து பரவலாகக் கூறப்படுகிறது.

ஆங்கிலேயே ஆதிக்கத்தை தடுக்க நினைத்த சின்னமலை

சின்னமலை இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளா பகுதியிலும், கொங்கு நாட்டின் (கோவையை சுற்றியுள்ள) சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படை ஒன்று சேராதவாறு, இடையில் இருந்து பெரும் தடையாகச் சின்னமலை விளங்கி வந்தார். இதனால் ஆங்கிலேயர் தீரன் சின்னமலை மீது பகைக் கொண்டனர்.

திப்பு சுல்தானுக்கு உதவிய சின்னமலை

டிசம்பர் 7, 1782 -இல் ஐதரலியின் மறைவிற்குப் பிறகு திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

ஓடாநிலை எனும் ஊரில் கோட்டைக் கட்டிய சின்னமலை

yt_custom


நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். பாலையக்காரராக அறிவித்துக் கொண்ட பாலையக்காரராக அறிவித்துக் கொண்ட தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

கோவை கோட்டையை தகர்க்க முயற்சி

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார்.

புரட்சி போர் தோல்வி

ஆனால், அதற்கு முந்தைய நாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

சின்னமலையின் திருப்பணிகள்

தொடர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்து போர் செய்து வந்த போதிலும் கூட, கோவில் திருப்பணிகளில் ஈடுபட்டு வந்தார் தீரன் சின்னமலை. மற்றும் புலவர் பெருமக்களையும் ஆதரித்து வந்தார். சின்னமலையின் பற்றிய பண்பு நலன்கள் குறித்து கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் இன்னமும் கூட இருக்கிறது.

தொடர்ந்து போரில் வெற்றிபெற்று வந்த சின்னமலை

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது குறிப்பிடத்தக்கது.

தீரன் சின்னமலையை கொல்ல சூழ்ச்சி

சண்டையிட்டு சின்னமலையை கொல்ல முடியாது என சூழ்ச்சி செய்து கொல்ல முயற்சி செய்தார்கள் ஆங்கிலேயர்கள். சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர்.

நினைவு சின்னங்கள்

இந்திய அரசும், தமிழக அரசும் இவரது நினைவாக உருவ சிலைகளும், மற்றும் தபால் தலையும் வெளியிட்டுள்ளது.


yt_middle

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Telegram_Side
Insta_right
Twitter_Right
mobile_App_right
fb_right