பொள்ளாச்சியில் வியாபாரிகளுக்கு கொரோனா; மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது

 Saturday, August 1, 2020  10:56 AM   No Comments

பொள்ளாச்சியில் வெங்காய வியாபரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வெங்காய விற்பனை கூடம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் உள்ள வெங்காய மார்க்கெட் பகுதியில் 2 வெங்காய வியாபாரிகளுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி படேல் வீதியை சேர்ந்த ஒருவருக்கும் (வயது.52), ஆண்டாள் நகரை சேர்ந்த ஒருவருக்கும் (வயது:61) தொற்று ஏற்பட்டுள்ளது. 2 பேரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


yt_middle

அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வசித்த வீதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த வியாபாரிகளுடன் பழகிய மற்றவர்கள் தாமாகவே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொள்ளாச்சி வெங்காய விற்பனை கூடம் 10 நாட்களுக்கு தாற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது



yt_custom

Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

fb_right
Twitter_Right
Telegram_Side
mobile_App_right
Insta_right