அன்னூர் காவல் நிலையத்தில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று

 Saturday, August 1, 2020  11:10 AM   No Comments

அன்னூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் 2 காவலர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்ட்ட நிலையில் அங்கு மேலும் அங்கு 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.


yt_custom

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று முன்தினம், உதவி ஆய்வாளருக்கும், ஒரு ஏட்டுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதன்பிறகு உடன் பணியாற்றும் மற்ற காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறப்பு எஸ்.ஐ ஒருவருக்கும் (வயது.32) , ஏட்டு ஒருவருக்கும் (வயது.42) நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அன்னூர் காவல்நிலையத்தில் மொத்தமாக 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


yt_middle

Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

mobile_App_right
fb_right
Telegram_Side
Insta_right
Twitter_Right