6 மாதத்திற்கு பிறகு வெளியே வந்த அரிசி ராஜா யானை; திரும்பி வந்துட்டேன்னு.. சொல்லு..!!!!

 Saturday, August 1, 2020  09:04 PM   No Comments

டாப்சிலிப்பில் 6 மாத பயிற்சிக்கு பிறகு அரிசி ராஜா யானை வெளியே வந்தது.. யானையை வனத்துறையினர் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்..

பொள்ளாச்சி பகுதியில் 6 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியை விட்டு ஊருக்குள் நுழைந்த அரசி ராஜா யானை உணவுகளை தேடி அலைந்தது. சில இடங்களில் அரிசி மூட்டைகளை மட்டும் விரும்பி உண்டதால் அரசி ராஜா என்ற பெயர் பெற்றது. அந்த சமயத்தில் இந்த யானைக்கு ரசிகர் கூட்டமே இருந்தது. பிறகு இந்த இந்த யானையை வனத்துறையினர் பிடித்து லாரியில் ஏற்றி டாப்ஸ்லிப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.


yt_middle

அங்கு மரக்கூண்டில் அடைத்து வைத்தனர். பிறகு 6 மாதகாலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. பாகன்கள் கட்டளைக்கு அடிபணிந்து உணவு உட்கொள்ளுதல், பாகன்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து அரிசி ராஜா யானை மரக்கூண்டில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டது.

வெளியே வந்த அரிசி ராஜாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வனத்துறையினர், பாகன்கள் அரிசி ராஜாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இந்த யானை இனி, மீட்பு பணிகள் மற்றும் ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் மற்ற காட்டுயானைகளை காட்டிற்குள் விரட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படும்,.


yt_custom

Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

fb_right
Telegram_Side
mobile_App_right
Insta_right
Twitter_Right