காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் உபாதைகள்

 Wednesday, August 19, 2020  12:30 PM   No Comments

குழந்தைகளை குறிப்பிட்ட நேரத்தில் காலையில் தினமும் உணவு சாப்பிட பழகிவிட்டால், அடுத்தடுத்த நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும்.

பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் 7 முதல் 8 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த நேரத்தில் வயிறு பசிக்கவில்லை என்று கூறி, நிறைய குழந்தைகள் சாப்பிடாமல் செல்வார்கள். ஆனால் காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். சாப்பிட்ட பின்பு அதுவே அஜீரணத்திற்கும் காரணமாகிவிடும்.

குறிப்பிட்ட நேரத்தில் காலையில் தினமும் உணவு சாப்பிட பழகிவிட்டால், அடுத்தடுத்த நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும். எனவே குழந்தைகள் காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு கட்டாயமாக சாப்பிடவைத்தால் பிறகு தானாகவே காலை 7 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும்.

உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறும். உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அதனால் அவசரமாக சாப்பிட்டாலும் அஜீரணம் தோன்றும்.காலையில் பள்ளி வேனை பற்றிய பயம் எல்லா பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இருந்து கொண்டிருக்கிறது. வேனை பிடிக்கும் அவசரத்தில் உணவை அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். அல்லது ‘பள்ளி வேன் வந்துவிட்டது’ என்று கூறி, காலை உணவை தவிர்க்கிறார்கள். இதனால் பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் ஜீரணக்கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் ‘குளூட்டின்’ என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் ‘செலியாக்’ எனப்படுகிறது. இந்த நோய் தாக்கினால் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் வாடை வீசும். வயிறு வீங்கி, வலித்ததுபோல் இருக்கும். இந்த அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் உடல்வளர்ச்சி தடைபடும். உடல் எடையும் குறையும்.

அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் வயிற்றுப்போக்கு குறிப்பிடத்தக்கது. உணவு சாப்பிடும் பழக்கத்தில் ஏற்படும் முரண்பாடு மற்றும் சீதோஷ்ணநிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது. கோடைகாலத்தில்தான் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.

பால் மற்றும் பால்வகை உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள் பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சோயா பால் பருகலாம்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right