கொரோனா பரவலை தடுப்பதில் சிறந்தது சானிடைசரா? சோப்பா?

 Tuesday, September 1, 2020  12:30 PM   No Comments

கொரோனா பரவலை தடுப்பதில், ஹாண்ட் சானிடைசர் மற்றும் சோப்பு நீர் இரண்டில் எது சிறப்பாக செயல்படும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கொரோனா பரவல் அதிகரித்தாலும், ஒரு பக்கம் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. மெதுவாக பல துறைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. எனவே கூடுதல் எச்சரிக்கை தேவை.

சுத்தமாக இருப்பதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் தான், கொரோனாவில் இருந்து தப்பிக்க நமக்கு இருக்கும் சிறந்த வழி என்று கூறலாம்.

வெளியிடங்களுக்கு போக்கும் போது தொற்று பரவாமல் இருக்க, COVID-19 தொற்றிலிருந்து தப்பிக்க, நமது கைகளை அடிக்கடி, சோப்பு நீரினால் சுத்தம் செய்யுங்கள் அல்லது ஆல்கஹால் உள்ள சானிடைஸரை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துகின்றனர்.சானிடைசர் vs சோப்பு நீர் இதில் எதை பயன்படுத்தலாம் என பார்க்கும் போது, நிச்சயம் சானிடைஸர் தான் வசதியானது. ஏனென்றால், தண்ணீர் இல்லாத இடத்திலும் நாம் கைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால், சோப்பு நீர் தான் சானிடைஸரை விட சிறந்தது என வல்லுநர்கள் கூறுகின்றனர். அது கைகளில் உள்ள கிருமிகளை அகற்றுவதோடு, கைகளில் உள்ள அசுத்தம், பிசுக்கு ஆகியவற்றையும் போக்குகிறது.

சானிடைஸர் கொரோனா வைரஸை கொல்லும் என்றாலும், சருமத்தில் வியர்வை அல்லது ஈரம் இருந்தால், அது சனிடைஸரை நீர்த்து போக செய்வதால், அது திறன்பட செயல்படமால் போகும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதோடு, சானிடைஸரில் உள்ள உட்பொருட்கள் சரியான அளவில் சேர்க்கபடவில்லை என்றாலும், அல்லது கலப்படம் உள்ள சானிடைஸர் என்றாலும் அது திறன்பட வேலை செய்யாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதை மனதில் வைத்து பார்க்கும் போது, குறைந்தது 20 வினாடிகளுக்கு சோப்பு நீரினால் கைகளை கழுவது, தான் சிறந்த வழி என வல்லுநர்கள் நம்புகின்றனர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right