கோவை ரயில் பயணிகளின் நண்பன் -- சேரன் விரைவுவண்டி (Cheran Express)

 Friday, September 4, 2020  05:30 PM   No Comments

எக்ஸ்பிரஸ் என்பது இந்தியாவில் செயல்படும் அதிவிரைவு ரயில்சேவைகளில் ஒன்றாகும். இது தினமும் கோயம்புத்தூர் நகர சந்திப்பிலிருந்து, சென்னை சென்ட்ரல் வரை சேலம் சந்திப்பின் வழியே இயக்கப்படுகிறது. இது இந்திய ரயில்வேயின் தெற்கு மண்டல ரயில்சேவைகளுள் ஒன்றாகும்.

12673 என்ற வண்டி எண்ணுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் சந்திப்பிற்கும், 12674 என்ற வண்டி எண்ணுடன் கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் சேரன் எக்ஸ்பிரஸ் செயல்படுகிறது

12673 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.10 மணியளவில் புறப்பட்டு, கோயம்புத்தூர் சந்திப்பினை அடுத்த நாள் காலை 6.05 மணியளவில் சென்றடைகிறது. இதேபோல் 12674 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் சேரன் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து இரவு 10.40 மணியளவில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினை அடுத்த நாள் காலை 6.45 மணியளவில் சென்றடைகிறது.

இந்த வழித்தடத்தினில் அநேக ரயில் நிலையங்கள் இருப்பினும் மிக முக்கியமான நகர ரயில் நிலையங்களில் மட்டுமே சேரன் எக்ஸ்பிரஸ் நிறுத்தத்தினைக் கொண்டுள்ளது. அவை : அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர் சந்திப்பு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு.

வண்டி எண் 12673

இது சென்னை சென்ட்ரலில் இருந்து, கோயம்புத்தூர் சந்திப்பு வரை செயல்படுகிறது. 7 மணி நேரம் மற்றும் 55 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 6 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 62 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 496 கிலோ மீட்டர் தொலைவினை 7 மணி நேரம் மற்றும் 55 நிமிடங்களில் கடக்கிறது. இது சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்புத்தூர் சந்திப்பு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 95 ரயில் நிறுத்தங்களில் 6 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது தனது தண்டவாளத்தினை 12655 மற்றும் 12656 என்ற வண்டி எண்கள் கொண்ட நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையுடன் பகிர்ந்துள்ளது. இதில் சரக்கறைக்கான வசதிகள் இல்லை, உணவு பரிமாறுதல் வசதி உள்ளது.

இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.L – SLR – UR – S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – PC – S2 – S1 – B5 – B4 – B3 – B2 – B1 – A1 – HA1 – UR – SLR

வண்டி எண் 12674

இது கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செயல்படுகிறது. 8 மணி நேரம் 5 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 7 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 61 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 496 கிலோ மீட்டர் தொலைவினை 8 மணி நேரம் 5 நிமிடங்களில் கடக்கிறது. செகந்திராபாத் சந்திப்பு மற்றும் காக்கிநாடா துறைமுகத்திற்கு இடைப்பட்ட 95 ரயில் நிறுத்தங்களில் 7 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது தனது தண்டவாளத்தினை 12655 மற்றும் 12656 என்ற வண்டி எண்கள் கொண்ட நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையுடன் பகிர்ந்துள்ளது. இதில் சரக்கறைக்கான வசதிகள் இல்லை, உணவு பரிமாறுதல் வசதி உள்ளது.

இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.

L – SLR – UR – HA1 – A1 – B1 – B2 – B3 – B4 – B5 – S1 – S2 – PC – S3 – S4 – S5 – S6 – S7 – S8 – S9 – S10 – S11 – S12 – UR – SLR

நிகழ்வுகள்

2005 ஆம் ஆண்டில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கழிவறையில் வைத்து ரயிலில் உருவான நெருப்பினால் கொல்லப்பட்டார். 2007 ஆம் ஆண்டில், சேரன் எக்ஸ்பிரஸின் ஐந்து ரயில் பெட்டிகள் ஆம்பூர் பகுதிக்கு அருகே தடம்புரண்டது. இதன் விளைவாக 10 பயணிகள் காயமடைந்தனர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right