கொரோனாவிலிருந்து மீண்டு வருமா கோவை.? தமிழகத்திலேயே 2-ம் இடத்தில் நீடிக்கிறது

 Saturday, September 5, 2020  12:06 PM   No Comments

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, இதில் தமிழகமும் விதிவிலக்கல்ல. நமது கோவைக்கு அதே நிலைதான்.. சென்னையில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளநிலையில் அதற்கு அடுத்தபடியாக கோவை தான் உள்ளது. நேற்றைய நிலவரப்படி 17,865 பேர் கோவையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். துவரை கோவையில் 322 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளையும் விட்டுவைக்கவில்லை. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறையினர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இந்த நோய்க்கு பலியானவர்கள் பெரும்பாலானோர் கொரோனா உடன் மற்ற பாதிப்புகள் உடையவர்களாகவே உள்ளனர்.

மருத்துவ நகரமாக அறியப்பட்ட கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. பல தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் பெறப்படுவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன. இருப்பினும் பிரசவம் மற்றும் பல முக்கிய சமயங்களில் தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு வழியனுப்பி வைக்கின்றன. இதனால் கோவை அரசு மருத்துவமனையில் முன் எப்போதும் இல்லாத வகையும் பிரசவ எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது .

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு போதிய படுக்கை வசதிகளின்றி, தனியார் இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல தனியார் அமைப்புகள் இடவசதிகளை தருவதற்கு முன்வந்துள்ளன.



கோவையிலும் சித்தமருத்துவம் :

சென்னையில் சித்தமருத்துவம் பார்ப்பதற்கு தனி முகாம் ஒதுக்கப்ட்டுள்ளதை போலவே கோவையிலும் தற்போது சிங்கநல்லூரில் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் 100 படுக்கைகளுடன் தனியாக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே கொடிசியா' அரங்கிலும் சித்த மருத்துவ சிகிச்சைக்கு சில படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

தமிழக்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் தமிழக அரசு தற்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த சமயத்தில் சமயத்தில் பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் இருந்தால் மட்டுமே இந்த நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தமுடியும்.

அரசு கூறியுள்ள நடைமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதுடன், பொது இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்கவேண்டும், சமூக இடைவெளி என்பதை மறக்காமல் கடைபிடிக்கவேண்டும். முதியவர்கள் அதீத எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அரசு ஆயிரம் திட்டங்கள் தீட்டினாலும் மக்கள் நினைத்தாலன்றி இந்த நோய்த்தொற்றை ஒழிக்கமுடியாது. கோவை இந்த 2-ம் இடத்திலுருந்து மீண்டு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை..

-- நொய்யல் செய்திக்குழு.



Similar Post You May Like

  • கொரோனாவின் பிடியில் கோவை மற்றும் சேலம்

     Fri, September 25, 2020 No Comments Read More...

    தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும

  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் பலி

     Sat, September 19, 2020 No Comments Read More...

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ப

  • மலம்புழா அணை... கேரளத்துக்குத் தமிழர்கள் அளித்த கொடை!

     Tue, September 15, 2020 No Comments Read More...

    நாட்டின் தற்போதைய தலையாயப் பிரச்னை, தண்ணீர். தென் மாநிலங்களில் கேரளா மட்டுமே தண்ணீர் நிறைவுபெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. கேரளா முழுவதுமே சிறியதும் பெரியதுமாக ஆறுகள் ஓடி, அந்த மாநிலத்தை வளப்படுத்துகின்ற




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right