கோவை தந்த கலைமாமணி - கவிஞர் பா.விஜய்

 Saturday, September 5, 2020  01:07 PM   No Comments

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை).

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். சிறு வயதிலேயே விஜயை எழுத்தார்வம் ஆட்கொண்டு விட்டது. படிப்பு இரண்டாம்பட்சம் ஆகிவிட்டது. பிளஸ்டூவில் தோல்வியடைந்து மனம் ஒடிந்து நின்ற விஜயை அவரது அப்பா தேற்றினார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

'படிப்பு போனாப் போகட்டும்... உனக்குத்தான் கவிதை, கதையெல்லாம் எழுத வருதே. அதுல உன்னை வளர்த்துக்கோ...’’

அந்த வார்த்தைகள் விஜயை உந்தித் தள்ளின. நன்றாக எழுத வேண்டும் என்றால் நிறைய வாசிக்க வேண்டும். தமிழில் உள்ள தொன்மையான இலக்கியங்கள், இலக்கண நூல்களை எல்லாம் தீவிரமாக வாசித்தார். கவிதைகளை எழுதிக் குவித்தார். விஜயின் தீவிரத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்த அவரது தந்தை, மீண்டும் உற்சாகத்தைப் பற்ற வைத்தார்.

“இவ்வளவு நல்லா எழுதுற நீ, திரைப்படங்களுக்குப் பாட்டு எழுத முயற்சி செய்யலாமே’’ விஜய் அந்த வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதற்கான முயற்சியில் இறங்கினார்.

பாக்யராஜ் மூலம் வாய்ப்பு!

இயக்குனர் பாக்யராஜ், விஜய்க்கு திரையுலக வாசலைத் திறந்து விட்டார். பாக்யராஜ் உடனான ஒரு சந்திப்பில், தாஜ்மஹாலைப் பற்றி, நீரோ மன்னனைப் பற்றி, கஜினியைப் பற்றியெல்லாம் பேசி பிரமிப்பூட்டினார். விஜயின் இலக்கியப் புலமையையும், வரலாற்றுப் புலமையையும் கணித்த பாக்யராஜ், விஜய்க்கு பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். தான் இசையமைத்து நடித்த 'ஞானப்பழம்' படத்திலேயே முதல் பாடலை எழுதும் வாய்ப்பையும் வழங்கினார்.

‘உன்னைப்போல் ஒருத்தி, மண்ணிலே பிறக்கவில்லை... என்னைப்போல் யாரும் உன்னை ரசிக்கவில்லை’ என்று பா.விஜய் எழுதிய முதல் பாடல் திரையுலகில் பெரிதும் கவனிக்கப்பட்டது. படிப்படியாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் எழுதிய ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடல் அவருக்கு தனியிடத்தை ஏற்படுத்தித் தந்தது. சோர்ந்து கிடக்கும் மனிதர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய அந்தப் பாடல், தேசிய விருதையும் பெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாடநூலிலும் இந்தப் பாடல் இடம்பெற்றது.

மறக்க முடியாத அனுபவம்!

‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடலுக்காக தேசிய விருது வாங்க டெல்லி சென்ற விஜய், அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமை, குடும்பத்தோடு சந்தித்துப் பேசினார். அப்போது, விஜயையும், அவரது மனைவியையும் இணைந்து அந்தப் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டாராம் அப்துல் கலாம். பிறகு, ‘‘சுதந்திர இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதை பாரதி, தன்னுடைய ‘வெள்ளிப் பனி மலையின் மீது...’ என்ற பாடலில் சொல்லியிருப்பார். அதேபோன்று, நீங்களும் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒரு கனவுப் பட்டியலுடன் ஒரு திரைப்பாடல் எழுதுங்கள்’’ என்று வேண்டுகோள் வைத்தாராம். ‘‘இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்’’ என்கிறார் பா.விஜய்.

நம்பிக்கை ததும்பும் பாடல்கள்!

இதுவரை 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் பா.விஜய். ‘இளைஞன்’ படத்தில், 'தோழா... வானம் தூரம் இல்லை', ‘ஏழாம் அறிவு’ படத்தில், 'இன்னும் என்ன தோழா' என விஜய் எழுதிய பல பாடல்கள் இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கை வெளிச்சத்தை ஏற்றுபவை. திரைப்பாடல்களில் மட்டுமின்றி, பா.விஜயின் கவிதைகளிலும் நம்பிக்கையை களமாக இருக்கிறது.

கதாநாயகனான கதை!

`பராசக்தி’ படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம் என்று இருக்கிறேன் என தன் ஆசையை கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார் பா.விஜய். ‘‘ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய, ‘தாய்’ நாவல் உனக்குப் பொருத்தமாக இருக்கும். அதைச் செய்' என்று ஆலோசனை சொல்ல, அவருடைய எழுத்திலேயே தாய் நாவல் 'இளைஞன்' என்ற பெயரில் படமாகியது. படத்தின் கதாநாயகனாக பா.விஜயே நடித்தார். இதையடுத்து ‘ஞாபகங்கள்’, ‘ருத்ரமாதேவி’, ‘நையப்புடை’, ‘ஸ்ட்ராபெர்ரி’ என அவரது நடிப்புப் பயணம் தொடர்கிறது. ஸ்ட்ராபெர்ரி படத்தை இயக்கியதும் அவரே!

ஒரே நாளில் 12 நூல்கள்!

‘உடைந்த நிலாக்கள்’, ‘கண்ணாடி கல்வெட்டுகள்’, ‘காட்டோடு ஒரு காதல்’, ‘நந்தவனத்து நட்சத்திரங்கள்’, ‘வானவில் பூங்கா’, ‘ஒரு கூடை நிலா’, ‘தூரிகை துப்பாக்கியாகிறது’, ‘நிழலில் கிடைத்த நிம்மதி’, ‘வள்ளுவர் தோட்டம்’, ‘அரண்மனை ரகசியம்’, ‘மஞ்சள் பறவை’, ‘கடவுள் வருகிறான் ஜாக்கிரதை’, ‘கறுப்பழகி’, ‘ஐஸ்கட்டி அழகி’, ‘நம்பிக்கையுடன்’, ‘தோற்பது கடினம்’, ‘செய்’ உள்பட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஒரே நாளில் தன்னுடைய 12 நூல்களை வெளியிட்டதும் விஜயின் தனித்துவங்களில் ஒன்று. அந்த நூல் வெளியீட்டு விழாவின்போது, விஜய்க்கு ‘வித்தகக் கவிஞர்’ என்று பட்டம் வழங்கினார் கருணாநிதி. ஒரு விழாவில், கவிஞர் வாலி, ‘‘சினிமாவில் என்னுடைய வாரிசு பா.விஜய்' என்று குறிப்பிட்டுப் பாராட்டியதும் குறிப்பிடத்தகுந்தது.

‘‘வாழ்க்கையில் ஒரே இடத்தில் தேங்கி நிற்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்’’ என்று கூறும் கவிஞர் பா.விஜயின் பயணங்கள் அனைத்தும் ஜெயிக்கட்டும்...!

பா.விஜய் நடித்த படங்கள் : 2010-ஞாபகங்கள், 2011-இளைஞன்

பா. விஜய் பெற்ற விருதுகள்
-------------------
2000 சினிமா எக்ஸ்பிரஸ் விருது
2001 தமிழ்நாடு திரைப்படச் சங்க விருது
2001 ராஜ் டி.வி. உழைப்பாளர் விருது
2001 வெரைட்டி விருது
2001 பாலர் ஜூனியர் சேம்பர் விருது
2002 லயன்ஸ் கிளப் கவிச்சிற்பி விருது
2002 தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது
2003 சர்வதேச தமிழ் திரைப்பட மலேசிய விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது
2003 வெற்றித் தன்னம்பிக்கையாளர் விருது
2003 சன் பீம் கல்வி நிறுவன விருது
2004 ட்ரைனிட்டி விருது
2004 சன் பீம் கல்வி நிறுவன விருது
2004 த.மு.எ.ச. துறைமுகம் விருது
2004 தேசிய விருது
2005 தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது
2005 பாரத் அசோசியேஸன் விருது
2005 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது
2005 எம்.ஜி.ஆர்.-சிவாஜி விருது
2005 சென்னை நண்பர்கள் விருது
2005 வெரைட்டி விருது
2005 தினகரன் விருது
2005 பிலிம் டுடே விருது
2006 எம்.ஜி.ஆர். விருது
2006 மலேசிய ஜி.எம்.டி. விருது
2006 தஞ்சை செங்குந்தர் மகாசன விருது
2006 செம்பனார்கோயில் லயன்ஸ் கிளப் வழங்கிய இளம் சாதனையாளர் விருது
2006 கÏர் ரோட்டரி கிளம்ப்பின் மொழிக்காவலர் விருது
2007 கலைமாமணி விருது
2007 ராஜீவ்காந்தி – முப்பனார்விருது
2007 கலைவித்தகர் - கண்ணதாசன் விருது
2007 இளம் கவி அரசர் விருது - கனடா
2007 பாரத் சினி விருது
2008 எம்.ஜி.ஆர். - சிவாஜி விருது
2008 திரை இசை விருது


2008 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சிறந்த தொலைக்காட்சி பாடலாசிரியருக்கான விருது
2008 ப்லீம்பேர் விருது
2009 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ்
2009 ப்லீம்பேர் விருது
2009 தமிழ்நாடு சினிமா கலை மன்ற விருது
2009 பாரத் சினி விருது
2010 தமிழ்நாடு சினிமா கலை மன்ற விருது சிறந்த பாடலாசிரியர் மற்றும் நடிகருக்கான விருது ஞாபகங்கள்
2010 சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான இசையருவி விருது சர்வம் திரைப்பட பாடல்
2011 சிறந்த பாடலாசிரியருக்கான எடிசன் விருது
2011 BIG FM சிறந்த வெற்றிப் பாடல் விருது
2011 தமிழ்நாடு திரைப்பட சங்க விருது
2011 சிறந்த தொலைக்காட்சி தொடர்ப்பாடல் விருது
2011 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது
2012 ராஜ் டிவி அகடவிடம் விருது
2012 லயன்ஸ் கிளப் சிறந்த கலைஞர் விருது
2012 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது
2012 நியூ ஃபிலிம் இந்திய நிறுவன விருது
2012 BIG FM
2012 சிறந்த பாடலாசிரியருக்கான Mirchi Music விருது

பா விஜய்-ன் படைப்புகள்

01 இந்தச் சிப்பிக்குள்
02 சுதியோடு வந்த நதி
03 நந்தவனத்து நட்சத்திரங்கள்
04 நிழலில் கிடைத்த நிம்மதி
05 போர்ப் புறா
06 ஒரு தூரிகை துப்பாக்கியாகிறது
07 உடைந்த நிலாக்கள் (பாகம் ஒன்று)
08 உடைந்த நிலாக்கள்(பாகம் இரண்டு)
09 உடைந்த நிலாக்கள்(பாகம் மூன்று)
10 சில்மி~pயே முழுமையான காதல் கவிதை தொகுப்பு
11 வானவில் பூங்கா (துபாயில் வெளியிட்டது)
12 காற்சிலம்பு ஓசையிலே (பாகம் ஒன்று)
13 காற்சிலம்பு ஓசையிலே (பாகம் இரண்டு)
14 நம்பிக்கையுடன்
15 கண்ணாடி கல்வெட்டுகள் - கல்கி தொடர்
16 அரண்மனை இரகசியம் (நாவல்)
17 பா.விஜய் பாடல்கள் (பாகம் ஒன்று)
18 பா.விஜய் பாடல்கள் (பாகம் இரண்டு)
19 உடைந்த நிலாக்கள் பகுதி ஒன்று (ஒலிநாடா)
20 பா.விஜய் கவிதைகள் (ஒலிநாடா)
21 வினாயகர் சரஸ்வதி ஸ்துதி (ஒலிநாடா)
22 கடவுள் வருகிறான் ஜாக்கிரதை (கவிதை)
23 காதல்@காதலிகள்.காம் (கவிதை)
24 பெண்கள் பண்டிகை (கவிதை)
25 இரண்டடுக்கு ஆகாயம் (கவிதை)
26 ஐஸ்கட்டி அழகி (கவிதை)
27 காகித மரங்கள் (கவிதை)
28 கைதட்டல் ஞாபகங்கள் (கவிதை)
29 அடுத்த அக்னி பிரவேசம் (கவிதை)
30 இருநாவல்கள் (நாவல்)
31 போர்ப்புறா - வாழ்க்கைத்தேடி வானம்பாடிகள்
32 18 வயசுல - முழுமையான காதல் கவிதை தொகுப்பு
33 வள்ளுவர் தோட்டம்
34 மஞ்சள் பறவை
35 பேச்சுலர் ரூம்
36 கறுப்பு அழகி
37 ஆப்பில் மாதிரி உன்னை அப்படியே
38 இதழியல் கல்லூரி (முத்தாலஜி பிரிவு)
39 நண்பன் நண்பி
40 ஒரு கூடை நிலா
41 கண்ணே நீ கயாஸ் தியரி
42 நட்பின் நாட்கள்
43 செய்
44 சமர்
45 ஞாபகங்கள்
46 பா.விஜய் ஓர் பார்வை
47 மோது முன்னேறு
48 தோற்பது கடினம்
49 என் பாட்டுக்கரையில்
50 சௌபர்னிகாSimilar Post You May Like

 • கொரோனாவின் பிடியில் கோவை மற்றும் சேலம்

   Fri, September 25, 2020 No Comments Read More...

  தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும

 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் பலி

   Sat, September 19, 2020 No Comments Read More...

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ப

 • மலம்புழா அணை... கேரளத்துக்குத் தமிழர்கள் அளித்த கொடை!

   Tue, September 15, 2020 No Comments Read More...

  நாட்டின் தற்போதைய தலையாயப் பிரச்னை, தண்ணீர். தென் மாநிலங்களில் கேரளா மட்டுமே தண்ணீர் நிறைவுபெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. கேரளா முழுவதுமே சிறியதும் பெரியதுமாக ஆறுகள் ஓடி, அந்த மாநிலத்தை வளப்படுத்துகின்ற
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right