உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா? அதன் பின் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

 tamil.boldsky.com  Saturday, September 5, 2020  02:03 PM   No Comments

நமது சமூகம் பல மூடநம்பிக்கைகளால் நிறைந்ததாகும். இன்றும் நம்மை சுற்றி பலவித மூடநம்பிக்கைகள் உலவி கொண்டுதான் இருக்கிறது. இந்த நம்பிக்கைகள் பல நூற்றாண்டுகளாக நம் மக்களிடையே நிலவி வருகிறது. படிப்படியாக இப்பொழுதுதான் ஓரளவிற்கு இந்த மூடநம்பிக்கைகளின் ஆதிக்கம் நமது சமூகத்தில் குறைந்துள்ளது, இருப்பினும் அவை முழுதாக அழிந்து விட்டதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

நம் மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகளில் பெரும்பாலானவை பணம் சார்ந்ததாகவே இருக்கும். காலையில் எழுந்தவுடன் எதை பார்க்கிறீர்கள், எந்த கடவுளை வணங்குகிறீர்கள், கண் துடிப்பது என அனைத்திற்கும் பின்னால் ஒரு மூட நம்பிக்கை நிச்சயம் இருக்கும். இந்த பதிவில் உள்ளங்கை அரிப்பது பற்றியும் அதன் உண்மையான அர்த்தம் என்பது பற்றியும் பார்க்கலாம்.

மூடநம்பிக்கைகள்

இன்றும் நம் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளில் முக்கியமானது வெளியே செல்லும்போது பூனை குறுக்கே வருவது கெட்ட சகுனம் என்பதாகும். இதுமட்டுமின்றி காலையில் பால்காரரை பார்ப்பது நல்லது, யாராவது நினைத்தால் விக்கல் வரும், விதவையை பார்க்கக்கூடாது என இன்றும் நம்மை சுற்றி ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளது. இதில் முக்கியமானது இடது உள்ளங்கை அரித்தால் பண நஷ்டம் ஏற்பட போகிறது என்பதாகும். அதற்கான விளக்கத்தை மேற்கொண்டு பார்க்கலாம்.

இடது உள்ளங்கை அரிப்பது

பொதுவாக உள்ளங்கை அரிப்பது நம்மை குழப்பத்தில் தள்ளும். அது எந்த உள்ளங்கை என்பதை பொறுத்து அது நல்லதா அல்லது கெட்டதா என்று முடிவு செய்வார்கள். இடது உள்ளங்கை அரிப்பது உங்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அரிப்பது லட்சுமி தேவி உங்களை விட்டு செல்ல போகிறார் என்பதன் அறிகுறி என்று கூறப்படுகிறது. இது திடீரென ஏற்படப்போகும் நஷ்டம், பணம் திருடுபோதல், எதிர்பாராத பெரிய செலவு என எதனுடைய அறிகுறியாகவும் இருக்கலாம்.

வலது உள்ளங்கை அரிப்பது

வலது உள்ளங்கை அரிக்கும் போது மக்கள் அதனை நல்ல செய்தி என்று நம்புவார்கள். வலது உள்ளங்கை அரிக்கும் போது அது ஒருவரின் மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. இதன் காரணம் உங்களை தேடி பணம் வரப்போகிறது என்பதன் அறிகுறி இதுவென கூறப்படுவதுதான். திடீரென உங்கள் கைக்கு பணம் வரும், லாட்டரியில் பணம் விழலாம், கீழே கிடக்கும் பணம் உங்கள் கண்களில் தட்டுப்படலாம், அல்லது வேறு பல வழிகளில் உங்களை பணம் தேடி வரும் என்று கூறப்படுகிறது.மாறுபட்ட கருத்துக்கள்

பல கலாச்சாரங்களில் உள்ளங்கை அரிப்பதால் ஒருவர் எதையும் இழக்கவோ, பெறவோ போவதில்லை என்று கூறுகிறார்கள். இது யாருடைய உள்ளங்கை அரிக்கிறது என்பதை பொறுத்தாததாகும். ஆணின் உள்ளங்கை அரித்தால் அவர் நஷ்டத்தை சந்திக்க போகிறார் என்று அர்த்தம், அதுவே வலது கை அரித்தால் அதிர்ஷ்டம் தேடிவர போகிறது என்று அர்த்தம். பெண்களை பொறுத்தவரை இது அப்படியே எதிர்மறையானதாகும், வலது உள்ளங்கை அரிப்பு நஷ்டத்தையும், இடது உள்ளங்கை அரிப்பு அதிர்ஷ்டத்தையும் குறிக்கும்.

கைகள் ஏன் அரிக்கிறது?

நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை, அனைத்தும் நம் எண்ணத்தில்தான் இருக்கிறது. உள்ளங்கையில் அரிப்பு ஏற்படுவது என்பது நமது உடலுக்குள் ஆற்றல் பரவுவதால் ஏற்படுவது மட்டுமே. பொதுவாக உடலின் இடப்பக்கமானது மிகவும் ஆபத்தான பகுதியாகும். எனவே அங்கு ஏற்படும் அனைத்து மாற்றங்களும் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது. ஒருவேளை பணம் செலவழிந்தால் அது நீங்கள் வாங்கும் பொருளுக்காகவோ அல்லது உங்கள் ஆரோக்கியம் தொடர்பான ஏதாவது செலவுக்ககவோ இருக்கலாம். இது உங்கள் நல்லதுக்குதான் பயப்படாதீர்கள்.

உள்ளங்கை அரிப்பை சரிசெய்வது எப்படி?

இடது உள்ளங்கை அரிக்கும் போது அதனை ஒரு மரக்கட்டையில் தேய்ப்பது உங்களுக்கு உடனடி தீர்வை வழங்கும். அதுமட்டுமின்றி தண்ணீரில் உப்பு கலந்து அந்த தண்ணீரில் கை கழுவுவது நல்ல பலனை அளிக்கும். எப்போதும் கையை சொரிந்து கொண்டிருப்பதை விட இது சிறந்த தீர்வாகும்.

மரக்கட்டையில் தேய்ப்பது ஏன் நல்லது?

உங்கள் உள்ளங்கையை மரக்கட்டையில் தேய்ப்பது நல்லது ஏனெனில் இதன்மூலம்தேவையற்ற ஆற்றல்கள் மரக்கட்டைக்கு சென்றுவிடும். இதன்மூலம் உங்கள் உடலில் இருக்கும் எதிர்மறை சக்திகளின் அளவு குறையும். இது நமது பழங்கால சடங்குகளில் ஒன்றாகவும் இருக்கிறது.Similar Post You May Like

 • குழந்தைகளை தொட்டு பேசுங்கள்...

   Thu, February 25, 2021 No Comments Read More...

  குழந்தைகளைதொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளாகள். தொட்டால் பூ மலரும் என்றுதான

 • தேங்காய் எண்ணெயின் 16 தோல் நன்மைகள் இங்கே.

   Tue, September 22, 2020 No Comments Read More...

  உலர்ந்த கைகள் இல்லை தேங்காய் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் உலர்ந்த கைகளால் பிரச்சினையை நீங்கள் தீர்க்க முடியும். நீங்கள் கேரேஜுக்கு அருகில் அல்லது மடுவில் சிறிது தேங்காய் எண்ணெயை வைத்திருக்க வேண்டும

 • முதுகுவலியா? அப்போ இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க...

   Tue, September 22, 2020 No Comments Read More...

  நாங்கள் உங்களுக்காக சில பயிற்சிகளைக் கொண்டு வந்துள்ளோம், இந்த உடற்பயிற்சியை செய்வதன் மூலம் முதுகுவலியிலிருந்து விடுபடலாம். எனவே இந்த பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வோம். கொரோனா வைரஸ் காரணமாக பூட்டப
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right