தமிழுக்காகத் தம்மை இழந்த - சத்தியமங்கலம் முத்து

இராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் செய்திகளைக் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேசியபடி இருந்துள்ளார் சத்தியமங்கலம் முத்து. 'தமிழுக்குப் பாடுபடுபவர்கள் சாகிறார்களே' என வருந்தி அழுதுள்ளார். பகலில் துணிக்கடையிலும் இரவில் பட்டறையிலும் பணியாற்றுவது முத்து வழக்கம். இரவு பட்டறையிலேயே தங்கி விடுவார்.
11.2.1965 ஆம் நாள் துணிக்கடையில் பணியாற்றிவிட்டு, சரக்குந்து பட்டறைக்கு வந்துள்ளார். இரவு 7.30 மணிக்கு உடலில் தீயிட்டுக் கொண்டு 'தமிழ் வாழ்க'! இந்தி ஒழிக!' எனக் குரல் எழுப்பியுள்ளார். தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்து, காவல்துறையிடம் வாக்குமூலம் தந்துள்ளார்.
'தமிழ் மாணவர்கள் தாக்கப்படக் கூடாது. தமிழ் வாழ வேண்டும். தமிழினம் வாழ வேண்டும். அதற்காகத்தான் தீக்குளித்தேன்'
அண்ணன் மாரியப்பன் தன் குழந்தையை முத்துவின் முகத்தருகே நீட்டி, பெயர் வைக்கச் சொல்லியுள்ளார்.

'தமிழ்ச்செல்வி' என அண்ணனின் குழந்தைக்குப் பெயர் வைத்த சில நிமிடங்களில் முத்துவின் உயிர் பிரிந்து விட்டது.
அன்றைய கோவை மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் குமாரபாளையத்தில் பெருமாள் பார்வதி மகனாக 31.7.1942 இல் பிறந்தவர் முத்து. அண்ணன் மாரியப்பன் தம்பி சின்னச்சாமி. வறுமையான குடும்பம். சத்தியமங்கலம் வந்து இருநேரமும் வேலை செய்வார்.
11.2.1965 இல் தீக்குளித்தவர் 18.2.1965ஆம் நாள் மருத்துவமனையில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்து மூன்று!
- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

Similar Post You May Like
-
கொரோனாவின் பிடியில் கோவை மற்றும் சேலம்
Fri, September 25, 2020 No Comments Read More...தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் பலி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ப
-
மலம்புழா அணை... கேரளத்துக்குத் தமிழர்கள் அளித்த கொடை!
நாட்டின் தற்போதைய தலையாயப் பிரச்னை, தண்ணீர். தென் மாநிலங்களில் கேரளா மட்டுமே தண்ணீர் நிறைவுபெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. கேரளா முழுவதுமே சிறியதும் பெரியதுமாக ஆறுகள் ஓடி, அந்த மாநிலத்தை வளப்படுத்துகின்ற
