பட்டுச் சேலைகளை பராமரிப்பது எப்படி?

 Thursday, September 10, 2020  11:33 AM   No Comments

விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும்.விசேசங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும். எக் காரணம் கொண்டும் பட்டுச் சேலையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. சோப்போ அல்லது சோப்பவுடரோ உபயோகித்து துவைக்கக்கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது. ஏதாவது கறை பட்டு விட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும்.

எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5, 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டும். பட்டுப் புடவைகளை வருடக் கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும். அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது. பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்த படி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.Similar Post You May Like

 • இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் கொரோனா காப்பீடு அவசியமா ?

   Sat, September 5, 2020 No Comments Read More...

  ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் எப்போது என்ன நடக்கும்? என்று உறுதியாக சொல்லமுடியாத நிலையே இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் கொரோனாவ

 • சண்டையின் போது மனைவியிடம் சொல்லக்கூடாதவை

   Fri, September 4, 2020 No Comments Read More...

  திருமண பந்தத்தில் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அதனால் மனைவியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். திருமண பந்தத்தில் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அற்புதமான உறவை உருவாக்கும் அல்லது சிதைக்க

 • தெரியாத நபர்களிடம் முதல் முறை பேசும்போது...

   Fri, July 24, 2020 No Comments Read More...

  இன்றைய சூழ்நிலையில் தெரியாத நபர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே திரும்ப பேசத் தயக்கம் காட்டும் நிலைமைதான் உள்ளது. தெரியாத நபர்களிடம் எப்போதுமே முதல் முறை பேசும்போது ஒரு தயக்கம் இருக்கும். அந்த உரையாடலை
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right