மாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய உரை - ஓர் சிறு தொகுப்பு

 Thursday, September 10, 2020  03:07 PM   No Comments

மதுரைக் கல்லூரியின் கணித விஞ்ஞானக் கழகத்தில் 24.2.1953 - அன்று ஜி.டி.நாயுடு ஆற்றிய சொற்பொழிவு அறிவுரை இது :

அன்புள்ள மாணவ நண்பர்களே! இந்தக் கல்லூரியை விட்டு வெளியேறுவதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், உங்கள் முன்பு நான் உரையாற்றுகிறேன்.

கல்லூரியை விட்டு நீங்கள் வெளியேறிய பிறகு, எதை நீங்கள் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைப் பற்றிச் சில அறிவுரைக் குறிப்புக்களை உங்கள் முன்பு சிந்தனைக் காக வைத்திட விரும்புகிறேன்.

அவை, உங்களுடைய பேராசிரியர்கள் வகுப்புக்களிலே அடிக்கடி கூறி அலுத்துப் போனவைகளே! என்றாலும், நான் கூறும் அறிவுரைகளில் மிக முக்கியமானது எது தெரியுமா? திரைப் படத்தைப் பார்க்கக் கூடாது என்பதே ஆகும்.

ஏன் பார்க்கக் கூடாது திரைப்படங்களை என்றால், அவைதான் மாணவர்களின் இளம் உள்ளங்களை கெடுக்கும் கருவிகளாகும் என்பது மட்டுமல்ல, கண்ணையும் - உடலையும் கெடுப்பதோடு, மனத்தையும் பாழாக்கி விடுகின்றன. பாக்டீரியா கிருமிகள் செய்ய முடியாத தீமைகளை எல்லாம் சினிமா படத்தில் வரும் காட்சிகள் செய்கின்றன. அவை உங்களுடைய சக்திகளை எல்லாம் சீரழித்து விடுகின்றன. மனோ சக்திகளைச் சிதறடித்துக் கோழைகளாக்கி விடுகின்றன.

புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு விடுங்கள். மூன்றாவதாக, அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலே கலந்து கொள்ளாதீர்கள், அவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகளைக் கேட்காதீர்கள். நான் கூறும் இவற்றை எல்லாம் நீங்கள் கேட்டவை தான். என்றாலும், மீண்டும் திரும்பத் திரும்பச் சொல்வது என்போன்றோர் கடமை ஆகும்.

தீமை தரும் எந்தப் பழக்கங்களுக்கும் மாணவர்கள் அடிமையாகி விடக்கூடாது. தவறி நீங்கள் அடிமையாவிர்களே யானால், அவை உங்கள் வாழ்நாட்களை வீணாக்கி விடுவதோடு, மனித சமுதாயமும் நஞ்சேறிய உடலாகி விடும்.

மாணவர்களைச் சாதாரணமாக 15 வயது முதல் 25 வயதிற்குள்தான் தீய பழக்கங்கள் பற்றும் பருவமாகும். அவற்றை இளம் வயதிலேயே மாற்றாவிட்டால், பிறகு எப்பொழுதுமே மாற்ற முடியாது. மாணவப் பருவத்தில் இயற்கையாகக் காணப்படும் ஊக்கமும், தைரியமும் தீய பழக்கத்தைச் சுலபமாக ஒழித்துவிடும் பருவமாகும்.

இளைஞர்கள் படித்துப் பட்டம் பெறும் காலத்தில் அறிவு முதிர்ச்சி பெறுகிறார்கள். அப்பொழுது அவர்களுக்கு நன்மை, தீமைகள் எவை என்பதைப் பகுத்தறியும் ஆற்றல் உருவாக வேண்டும். தீயவற்றை நீக்கி நல்லனவற்றைப் பின்பற்றத் தெரிய வேண்டும்.மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய தேர்வில் முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் இடத்திலே தேறாவிட்டாலும், அல்லது தேர்ச்சியே பெறா விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

ஆனால், தீமை தரும் பழக்கங்களைக் கைவிட்டு விட்டோம் என்ற நம்பிக்கையோடும், துன்பங்களை எதிர்நோக்கக் கூடிய மனோ திடத்தோடும் - நேர்மையான செயல்கட்குப் போராடும் உள்ளத் தோடும், ஆழ்ந்து நோக்கிப் பிரச்சனைகளை ஆராயும் தன்மை யோடும் - நீங்கள் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்களுடைய வாழ்நாட்கள் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வாகை சூடுவீர்கள்.

மாணவர்கள் பெறும் பட்டங்கள் மட்டும் உங்களுடைய வாழ்க்கையின் எல்லா நன்மைகளையும் வழங்கிவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். இங்கே நீங்கள் முதுகலைப் பட்டம் எனப்படும் எம்.ஏ. பட்டம் பெற்றிருக்கலாம். அல்லது பெறலாம். இந்தப் பட்டம் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு ஓர் ஆரம்பப் பாடமே ஆகும்!

கல்லூரிக்கு வெளியே நீங்கள் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அந்தக் கல்விக்கு இந்தப் பட்டமும் படிப்பும் முதல் படியாகத்தான் அமையும்.

வெளியுலக வாழ்க்கை என்பது ஒரு மொழி போன்றதே. அந்த மொழியை உணர, நீங்கள் படித்தக் கல்லூரிப் படிப்பு உங்களுக்கு எமுத்துக்களாகவே பயன்படும். அந்த மொழியால் நீங்கள் வெற்றிகண்ட உங்களுடைய வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களைச் சார்ந்து, நம்பி இருப்போர் வாழ்க்கையையும் நீங்கள் மேம்படுத்த வேண்டும்.

மாணவர்கள் நிறையக் கற்பதற்கும், உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்வதற்கும், உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இதுதான் தக்க பருவம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

உலகில் வாழ்ந்த மிகப் பெரிய தலைவர்களுடைய வாழ்க்கையை, வரலாற்றை எல்லாம் நீங்கள் படிக்க வேண்டும். அவர்களில் கல்லூரிப் பட்டங்கள் பெற்றவர்களும் உண்டு, பெறாதவர்களும் இருப்பார்கள்.

ஆனால், அவர்கள் அறிவைத் தேடி உழைத்திட ஓடியவர்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அத்தகையவர்கள் தான் மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டிகளாக வாழ்ந்தவர்கள் என்பதை எவராலும் மறக்க முடியாதவர்கள் ஆவர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெவின் என்பவர் இந்தியா விற்கு வருகை தந்தார். அவர் போர்க் காலத்தில் நமது நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு, இங்கிலாந்தில், குறுகிய நாட்களில், தொழில் பயிற்சி அளிப்பதற்கு ஒரு திட்டத்தை வகுத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதானால், நீண்ட நேரமாகும்
Similar Post You May Like

 • கொரோனாவின் பிடியில் கோவை மற்றும் சேலம்

   Fri, September 25, 2020 No Comments Read More...

  தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும

 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் பலி

   Sat, September 19, 2020 No Comments Read More...

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ப

 • மலம்புழா அணை... கேரளத்துக்குத் தமிழர்கள் அளித்த கொடை!

   Tue, September 15, 2020 No Comments Read More...

  நாட்டின் தற்போதைய தலையாயப் பிரச்னை, தண்ணீர். தென் மாநிலங்களில் கேரளா மட்டுமே தண்ணீர் நிறைவுபெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. கேரளா முழுவதுமே சிறியதும் பெரியதுமாக ஆறுகள் ஓடி, அந்த மாநிலத்தை வளப்படுத்துகின்ற
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right