இன்றைய தினம் -- செப்டம்பர் 15

 Tuesday, September 15, 2020  06:21 AM   No Comments

தேசிய பொறியியலாளர் தினம்

முதல் பொறியியல் வல்லுனராக திகழ்ந்த விஸ்வேஷ்வரய்யா அவர்களை கௌரவப்படுத்த அவரது பிறந்ததினத்தை நாம் பொறியியலாளர் தினமாக கொண்டாடுகிறோம். அற்புத ஆக்கதிறனை கொண்ட அவரை நினைவுப் படுத்தி இன்னும் பல சாதனைகள் புரிய இந்திய பொறியியல் மாணவர்கள் சிறப்பு செய்வார்கள் .

சர்வதேச ஜனநாயக நாள்

செப்டம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஜனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

1909 – C. N. அண்ணாதுரை, தமிழ்நாட்டின் 7வது முதலமைச்சர் (இ. 1969) பிறந்த தினம்

1959 – தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை தில்லியில் ஆரம்பமானது.

1981 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1916 – கம்பதாசன் கவிஞர், எழுத்தாளர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் (1973) பிறந்த தினம்

1950 – மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், (பி. 1876) நினைவு தினம்

2000 – 27-வது ஒலிம்பிக் விளையாட்டுகள், சிட்னியில் ஆரம்பமாயின.

1968 – சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.



1812 – பிரெஞ்சு இராணுவம் நெப்போலியனின் தலைமையில் மாஸ்கோவின் கிரெம்ளினை அடைந்தது.

1915 – ஆத்திரேலியாவில் முதலாவது திரையரங்கு 'நியூ எம்பயர் சினிமா' நியூ சவுத் வேல்சு, பௌரல் என்ர இடத்தில் அமைக்கப்பட்டது.

1935 – நாட்சி ஜெர்மனி சுவசுத்திக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படை வானூர்தி தாங்கிக் கப்பல் வாசுப் சப்பானியர்களினால் மூழ்கடிக்கப்பட்டது.

1947 – காத்லீன் சூறாவளி சப்பானைத் தாக்கியதில் 1,077 பேர் உயிரிழந்தனர்.

1952 – ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.

1948 – போலோ நடவடிக்கை: இந்தியத் தரைப்படை மகாராட்டிராவின் யால்னா, லாத்தூர், மொமினாபாது நகர்களைக் கைப்பற்றின.

1819 – பிரான்சிஸ் நேப்பியர், சென்னை மாகாண ஆளுநர் (இ. 1898) பிறந்த தினம்

1860 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, மைசூர் திவான், பொறியியலாளர் (இ. 1962) பிறந்த தினம்

1939 – சுப்பிரமணியன் சுவாமி, இந்திய அரசியல்வாதி பிறந்த தினம்

1954 – பி. வாசு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர் பிறந்த தினம்

1967 – ரம்யா கிருஷ்ணன், திரைப்பட நடிகை பிறந்த தினம்



Similar Post You May Like

  • இன்றைய தினம் -- செப்டம்பர் 18

     Fri, September 18, 2020 No Comments Read More...

    உலக நீர் கண்காணிப்பு நாள் உலகம் முழுவதிலும் தண்ணீர் வளங்களை பாதுகாப்பதில் போது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்கவேண்டும், உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையை பரிசோதித்து ந

  • இன்றைய தினம் - செப்டம்பர் 17

     Thu, September 17, 2020 No Comments Read More...

    தந்தை பெரியார் பிறந்ததினம் 1879 – சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவரும், திராவிட இயக்க

  • இன்றைய தினம் - செப்டம்பர் 16

     Wed, September 16, 2020 No Comments Read More...

    சர்வதேச ஓசோன் தினம் பூமியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் படலம், உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் ஒளியின் அளவைக் குறைக்கின்றது. உலகில்




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right