இன்றைய தினம் - செப்டம்பர் 16

 Wednesday, September 16, 2020  06:06 AM   No Comments

சர்வதேச ஓசோன் தினம்

பூமியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் படலம், உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் ஒளியின் அளவைக் குறைக்கின்றது.

உலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. நமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று நம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் தினமாக நினைவு கூறுகின்றன.

1987 - ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.

2009 – தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர் நினைவு தினம்

1852 - இலண்டனில் , மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது.

1887 - மென்பந்தாட்டம் முதன் முதலில் சிக்காகோவில் விளையாடப்பட்டது.

1908 - ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.

2000 - இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.2002 - விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.

2007 - தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89 பேர் கொல்லப்பட்டனர்.

1859 – யுவான் ஷிக்காய், சீனக் குடியரசின் அரசுத்தலைவர் (இ. 1916) பிறந்த தினம்

1884 – சிவகங்கை இராமச்சந்திரன், வழக்கறிஞர், திராவிட சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் (இ. 1933) பிறந்த தினம்

1916 – எம். எஸ். சுப்புலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகர், நடிகை (இ. 2004) பிறந்த தினம்

1950 – மாலன், இந்திய எழுத்தாளர் பிறந்த தினம்

1959 – ரோஜா ரமணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்

1976 – மீனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்

2012 – லூசு மோகன், இந்திய நடிகர் (பி. 1928) நினைவு தினம்Similar Post You May Like

 • இன்றைய தினம் -- செப்டம்பர் 18

   Fri, September 18, 2020 No Comments Read More...

  உலக நீர் கண்காணிப்பு நாள் உலகம் முழுவதிலும் தண்ணீர் வளங்களை பாதுகாப்பதில் போது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்கவேண்டும், உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையை பரிசோதித்து ந

 • இன்றைய தினம் - செப்டம்பர் 17

   Thu, September 17, 2020 No Comments Read More...

  தந்தை பெரியார் பிறந்ததினம் 1879 – சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவரும், திராவிட இயக்க

 • இன்றைய தினம் -- செப்டம்பர் 15

   Tue, September 15, 2020 No Comments Read More...

  தேசிய பொறியியலாளர் தினம் முதல் பொறியியல் வல்லுனராக திகழ்ந்த விஸ்வேஷ்வரய்யா அவர்களை கௌரவப்படுத்த அவரது பிறந்ததினத்தை நாம் பொறியியலாளர் தினமாக கொண்டாடுகிறோம். அற்புத ஆக்கதிறனை கொண்ட அவரை நினைவுப் படு
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right