கோவையில் தனியாா் ஆய்வகங்கள் கொரோனா முடிவுகளை 12 மணி நேரத்திற்குள் தெரிவிக்க ஆட்சியர் உத்தரவு

 Wednesday, September 16, 2020  06:14 AM   No Comments

கோவையில் செயல்பட்டு வரும் தனியாா் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவையில் நேற்று நடந்த கொரோனா தடுப்பு பற்றிய ஆய்வு கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கூறியதாவது..

** கோவையில் உள்ள கொரோனா பரிசோதனை செய்யும் தனியாா் ஆய்வகங்கள் பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்..



** தனியார் ஆய்வகங்கள் பல்ஸ் - ஆக்ஸி மீட்டா் மூலம் பரிசோதனை செய்வதுடன், அதில் அறிகுறி உள்ளவா்களை சோதனை முடிவு வரும் முன்னரே மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

** அரசு நிா்ணயித்த கட்டணம் மட்டுமே ஆய்வகங்களில் வசூலிக்க வேண்டும்.

** உடனடியாக அவா்களின் தொடா்பு விவரத்தை சுகாதாரத் துறை மற்றும் கோவை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்.

என மாவட்ட ஆட்சியர் கூறினார்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right