காளப்பட்டியில் நேற்று 15 பேருக்கு கொரோனா தொற்று

 Wednesday, September 16, 2020  01:55 PM   No Comments

கோவையில், காளப்பட்டி பகுதியில் நேற்று அதிகபட்சமாக 15 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை தவிர வெள்ளக்கிணறு பகுதியில் 13 பேரும், விளாங்குறிச்சியில் 12 பேரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.



கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்துவருகிறது. கடந்த வாரம் வரை 600-ஐ தொடும் நிலையில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக 500-க்கும் குறைவாக பதிவாகி வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதும் காரணம் ஆகும். இருப்பினும் நேற்று 485 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 62, 64 வயது மூதாட்டிகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 51 வயதுப் பெண், 50 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 3,593 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right