நீலகிரியில் தொடரும் கனமழை; அவலாஞ்சியில், 20 செ.மீ., மழை பதிவு.

 dinamalar  Monday, September 21, 2020  07:51 AM   No Comments

மேற்குதொடர்ச்சிமலை மற்றும் நீலகிரி, கோவை பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பிவருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில், 20 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், மழையினால் ஊட்டி, மஞ்சூர், கிண்ணக்கொரை, இத்தலார், அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில், பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

நீலகிரியில் வெப்பநிலை 15 - 9 ஆக உள்ளது. அங்கு கடும்குளிரும் நிலவிவருகிறது. அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி, கெத்தை, குந்தா, மாயார், பைக்காரா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பிவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right