குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை ரூ.1,200 கோடியில் 4 வழிச்சாலை அமைக்க திட்டம்

 Source : Maalaimalar.com  Monday, September 21, 2020  08:02 AM   No Comments

கோவை குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை ரூ.1,200 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 731 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

கோவையில் இருந்து சத்தியமங்கலம் மற்றும் திம்பம் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் முக்கிய சாலையாக சத்திசாலை இருக்கிறது. இந்த சாலையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க சத்திசாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி கூறியதாவது:-



கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை 50 கிலோ மீட்டர் தூரம் ரூ.1,200 கோடி செலவில் 4 வழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலையின் அகலம் 60 மீட்டர். மேலும் சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்படும். தேவைப்படும் இடங்களில் மேம்பாலங்களும் கட்டப்படும். இதில் திம்பம் வரை அமையும் 90 கிலோ மீட்டர் இடைவெளியில் 2 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும். இந்த சாலையை விரிவாக்கம் செய்ய 731 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட வேண்டும். இதற்காக கோவை மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் நில கையகப்படுத்தி கொடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட உள்ளது.

மேலும் இந்த சாலை அகலப்படுத்துவதற்கான திட்டவரைவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் வரையிலான சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் இருக்கிறது. இதற்காக வனப்பகுதியில் நிலம் கையகப்படுத்த முடியாது. ஆனாலும் 7 மீட்டர் அகலமுள்ள இந்த பகுதியில் 10 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது.

மேலும் காந்திபுரத்தில் இருந்து குரும்பபாளையம் வரை உள்ள சாலையை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right