கோவையில் நேற்று உச்சத்தை அடைந்த கொரோனா; ஒரேநாளில் 648 பேர் பாதிப்பு.

 Tuesday, September 22, 2020  07:27 AM   No Comments

கோவையில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரேநாளில் 648 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்ட்டது. இதில் அதிகபட்சமாக கணபதி பகுதியில் 28 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.மேலும் கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்த 2 மருத்துவர்கள் உட்பட 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கணபதி பகுதியில் 28 பேருக்கும், காரமடையில் 20 பேருக்கும், சரவணம்பட்டி மற்றும் துடியலூரியில் தலா 14 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலமாக கோவையில் மொத்த பாதிப்பு, 26,562 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6 பேர் உயிரிழந்துள்ளனர் . ஒரே நாளில், 531 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.தற்போது, 4,475 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right