கோவையில் நிரம்பி வழியும் குறிச்சி குளம், உக்கடம் பெரியகுளம்

 Tuesday, September 22, 2020  09:35 AM   No Comments

கோவை மாவட்டத்தில், இந்தாண்டிற்கான தென்மேற்கு பருவமழை சராசரி அளவை தாண்டி கூடுதலாக பெய்துள்ளதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிச்சிக்குளம், உக்கடம் பெரியகுளம், சுண்டக்காமுத்தூர் குளம், வெள்ளலூர் குளம் ஆகியவை கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தான் அதிக மழையை கொடுக்கும், அதனபடி இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கால தாமதமாக தொடங்கியது. இதனால் மழை குறைவாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சராசரி அளவான 188 மில்லிமீட்டர் அளவை தாண்டி மழை பெய்து உள்ளது.



கோவை உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகிய குளங்கள் 85 சதவீதம் அளவிற்கும், வெள்ளலூர் பெரியகுளம் 80 சதவீதம் அளவிற்கும் நிரம்பியுள்ளன. இன்னும் சில நாட்களில் இந்த குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 188 மில்லி மீட்டர் அளவிற்கு பெய்யும். ஆனால் இந்த ஆண்டு சராசரி அளவை தாண்டி 269 மி.மீ. அளவிற்கு பெய்துள்ளது



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right