கோவையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று; காரணம் என்ன?

 Courtesy : Maalaimalar.com  Tuesday, September 22, 2020  09:44 AM   No Comments

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. தினமும் 500 என்ற கணக்கிலேயே தொடர்ந்துவந்த எண்ணிக்கை நேற்று 600-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் இந்த பாதிப்பு அதிகரித்திருப்பதன் காரணமாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநகராட்சி பகுதிகளில் அதிக பாதிப்புக்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதற்கு பரிசோதனைகளை அதிகப்படுத்தியிருப்பதே காரணம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் ஒரு மண்டலத்துக்கு 1000 பேர் வீதம் தினமும் 5 ஆயிரம் பேருக்கும், புறநகர் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் என தினமும் 8 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனைகள் அதிகரிக்க அதிகரிக்க தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தான் செய்யும். இது ஒரு நேர்மறையான நடைமுறை. மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி என மொத்தம் 10 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதன் மூலம் அதிக பரிசோதனைகளை செய்ய முடிகிறது. என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right