நீலகிரில் கனமழை எதிரொலி; பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன

 Maalaimalar.com  Tuesday, September 22, 2020  09:53 AM   No Comments

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணிகளில் பணியாளர்கள் துரிதமாக இறங்கியுள்ளனர்.

-- ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தலைகுந்தா மற்றும் சூட்டிங்மட்டம் பகுதியில் மரங்கள் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-- ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் மரக்கிளை முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது.

-- ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் உயர் மின் அழுத்த கோபுரம் மீது மரம் சாய்ந்து விழுந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் மின் இணைப்பை துண்டித்து, மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.-- ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தெய்வமலை, 27-வது மைல், நடுவட்டம், பைக்காரா உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.

-- கூடலூரில் இருந்து பெரியசோலைக்கு செல்லும் சாலையில் பார்வுட் என்ற இடத்தில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் கூடலூர்-ஓவேலி இடையே காலை 8.30 முதல் 9.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-- கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் உள்ள கீழ்நாடுகாணி என்ற இடத்தில் மரம் சாய்ந்து விழுந்தது.

-- கூடலுர் அருகே புளியாம்பாரா மற்றும் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லி, கோட்டப்பாடி, கரியசோலை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right